MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை

க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை

Admin
Last updated: மே 25, 2026 4:05 மணி
Admin
Share
SHARE

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, 17 வயது சிறுவன் ஒருவன் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மாநகராட்சி கார் பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று, குபேந்திரன் என்ற சிறுவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்த விளக்குத்தூண் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணிக்கும் இடையே கழிப்பறை அருகே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோதலில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அவர் குபேந்திரனைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

நேற்று இரவு, குபேந்திரன் மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே நின்றுகொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த முத்துமணி, அவனது சகோதரன் ராஜ் மற்றும் சதீஷ் குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அவனை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தப்பி ஓட முயன்ற குபேந்திரனை விடாமல் துரத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி பதிவுகளில் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவன் குபேந்திரன் மீதும் ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி அம்மன் கோயில் போன்ற புனிதமான மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அருகே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறையினர் இப்பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Madurai Crimeகொலைதமிழ்நாடு செய்திகள்மதுரைமீனாட்சி அம்மன் கோயில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி
Next Article கார்த்தி 30வது படத்தின் பூஜை ஐதராபாத்தில் கோலாகலம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் மாநில ஆளுநர்

பஞ்சாப் தனியார் பள்ளிகளில் 5% கட்டண உயர்வு: ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாப் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம் என அவசர…

ஜூலை 14, 2026

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரில் சிபிஐ…

ஜூலை 14, 2026

தேசிய விருது பெற்ற விவசாயிக்கு ரூ.83,244 சைபர் மோசடி

செல்போன் தொலைந்ததால், தேசிய விருது பெற்ற விவசாயி…

ஜூலை 14, 2026

தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக்…

ஜூலை 14, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை: 1 லட்சம் பேர் தவிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு…

ஜூலை 14, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சிவகங்கையில் தவெக நிர்வாகி வெட்டி கொலை: பரபரப்பு

சிவகங்கையில் தவெக உறுப்பினர் நவீன் (24) மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எம்.எல்.ஏ தலையிட்டார். 2 பேர் கைது.

1 Min Read
க்ரைம்

பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!

போதைக்கு அடிமையான பேரன், பணம் கேட்டு தகராறு செய்ததில் தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
க்ரைம்

வடலூரில் 103 சவரன் நகை திருட்டு: வெளிநாட்டில் மகன், வீட்டில் தங்கியிருந்தவருக்கு அதிர்ச்சி!

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் 103 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை. வெளிநாட்டில் உரிமையாளர், வீட்டில் தங்கியிருந்த பெண் அதிர்ச்சி. 5 தனிப்படை விசாரணை.

1 Min Read
சினிமா

ஜீவா – லார்க் ஸ்டூடியோஸ் இணையும் புதிய குடும்பப் படம்!

நடிகர் ஜீவா, லார்க் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து மதுரை பின்னணியில் ஒரு புதிய குடும்பப் படத்தை தயாரிக்கிறார். 'தலைவர் தம்பி' பட வெற்றிக்குப் பிறகு இந்த அறிவிப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?