MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஆன்மிகம்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

Admin
Last updated: மே 15, 2026 7:58 மணி
Admin
Share
SHARE

உலகப் புகழ் பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடக்கும் இந்த திருவிழா, இந்த முறை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சித்திரை கடைசி நாள் தேரோட்டத்துடன் தொடங்கி, வைகாசி முதல் நாள் அம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று நடந்த தேரோட்டத்தில் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று காலை நடந்த அம்மன் சிரசு ஊர்வலம், அதிகாலை 4.45 மணியளவில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தொடங்கியது. நீலிகோவிந்த செட்டி தெரு, காந்தி ரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக சுமார் நான்கரை மணி நேரம் மிதந்து, காலை 9.15 மணியளவில் கோவிலை அடைந்தது.

ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும், பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பல இடங்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். வீடுகள், மாடிகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அம்மன் சிரசு ஊர்வலம் வரும்போது, வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மாடிகளில் இருந்தும் பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வழிபட்டனர்.

கோவிலை அடைந்ததும், அம்மன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் சிரசு பொருத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிரசு ஊர்வலம் மற்றும் கோவில் தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், அன்னதானம், குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக, இஸ்லாமிய சகோதரர்களும் தண்ணீர் பந்தல் அமைத்து, குளிர்பானங்கள், மோர் மற்றும் அன்னதானம் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DevotionTamil Nadu Festivalsகுடியாத்தம்கெங்கையம்மன்சிரசு திருவிழா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எம்ஜி மெஜஸ்டர் டீசல்: கம்பீரமான எஸ்யூவி – எங்கள் அதிரடி ரிவ்யூவ்!
Next Article தைவான் விவகாரம்: சீனா எச்சரிக்கை! டிரம்ப் பதில் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிக்கு என்ஐஏ சம்மன்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி சயீத் இப்ராகிமுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

திருப்பதி ஆஞ்சநேயர் சிலை மீட்பு
ஆன்மிகம்

திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை 14 மணி நேரத்தில் மீட்பு

திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை 14 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு, ஆகம முறைப்படி மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மலைப்பாதை கோவில்களுக்கு பாதுகாப்பு கிரில் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள்…

1 Min Read
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரலட்சுமி விரத பூஜை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு குடிநீர், தரிசனம், பாதுகாப்பு, தூய்மை, மருத்துவ வசதிகள் செய்ய உத்தரவு.

2 Min Read
ஸ்ரீவாரி லட்டு பிரசாதம்
இந்தியா

ஸ்ரீவாரி லட்டு: 311 ஆண்டுகள் நிறைவு கண்ட பக்தர்களின் நம்பிக்கை சின்னம்

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் சின்னமான ஸ்ரீவாரி லட்டு, 311 ஆண்டுகால பாரம்பரியத்தை நிறைவு செய்துள்ளது. இது 1715 ஆகஸ்ட் 2 முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

2 Min Read
புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து வழிபாடு செய்யும் பெண்கள்
ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு: புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் வழிபாடு

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?