MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவளம் மாநாடு: விஜய் அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? – கிருஷ்ணசாமி கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவளம் மாநாடு: விஜய் அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? – கிருஷ்ணசாமி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவளம் மாநாடு: விஜய் அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? – கிருஷ்ணசாமி கேள்வி

தமிழ்நாடு

கோவளம் மாநாடு: விஜய் அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? – கிருஷ்ணசாமி கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 23, 2026 1:54 மணி
Fernandez
Share
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
SHARE

கோவளத்தில் நடைபெற்ற தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து சட்டமன்றத்தில் ஏன் விளக்க அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அன்றாடம் எழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கு, அமைச்சர்களின் பதில்கள் 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன?' என்பது போல அர்த்தமற்றதாகவும், திசைதிருப்பும் வகையிலும் அமைந்துள்ளன. நேரலை ஒளிபரப்பில் அவர்களின் இத்தகைய பதில்கள் சமூக ஊடகங்களுக்குப் பயன்படுமே தவிர, மக்களுக்கு எந்தப் பயனையும் தராது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "பேரவைத் தலைவர் நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார். அமைச்சர்களின் அடாவடியான, அருவருக்கத்தக்க பேச்சுக்கள் லட்சக்கணக்கான மக்களிடையே சென்றடைந்த பிறகு, அதைக் குறிப்பிலிருந்து நீக்குவது 'குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்'. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழகத்தில் எதிர்ப்புகள் எழும் என்று எண்ணி, எந்தவித முன் அறிவிப்புமின்றி, தமிழகத்தின் கோவளம் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்னிந்திய முதலமைச்சர்களுடைய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மேகதாது பிரச்சனை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, பெரியாறு அணைக்கட்டு உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, ஆந்திராவுடனான பாலாறு குறித்த பிரச்சனைகள் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் பேசியது என்ன என்பது குறித்து சட்டமன்றத்திற்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், ஏன் முதலமைச்சர் விஜய் அதைச் செய்யவில்லை? இது குறித்து எதிர்கட்சியினர் யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?" என்றும் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அமைச்சர்களின் பதில்கள் 'Reels content' மற்றும் மீடியா வெளிச்சத்தை மட்டுமே குறிவைத்து பேசுவதாகவும், கோவளம் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என்றும், தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் திசைமாறிப் போகிறதா என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kovalam MeetingKrishnasamyTamil Nadu AssemblyVIJAYகிருஷ்ணசாமிகோவளம் மாநாடுதமிழக சட்டமன்றம்புதிய தமிழகம் கட்சிவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டாடா டக்கர் கார் டாடா டக்கர்: ரூ.47,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!
Next Article அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளிக்கும் காட்சி வைரல் வீடியோ வதந்திக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் சவால்: ‘தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள்!’

திமுகவை விமர்சித்த முதல்வர் விஜய்க்கு, திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் 'தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்' என சவால் விடுத்துள்ளார். மிசா காலத்தையும் பார்த்தவர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

அரசு ஊழியர்களே கவனம்: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்கள் கட்டாயம்!

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது…

1 Min Read
தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் காதல்: கடிதம் எழுதிவிட்டு மாயமான மாணவி மீட்பு

கோவை: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலுக்காக, காதலனுடன் செல்வதாக கடிதம் எழுதிவிட்டு மாயமான 16 வயது மாணவியை போலீசார் மீட்டனர். செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில்,…

1 Min Read
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை
தமிழ்நாடு

சிறையில் கை, கால்களை கட்டி கொடூரமாக அடித்து கொலை: சிபிசிஐடி விசாரணை

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன், கை, கால்களை கட்டி கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமானது. 11 பேர் கைது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?