MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறையில் கை, கால்களை கட்டி கொடூரமாக அடித்து கொலை: சிபிசிஐடி விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறையில் கை, கால்களை கட்டி கொடூரமாக அடித்து கொலை: சிபிசிஐடி விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிறையில் கை, கால்களை கட்டி கொடூரமாக அடித்து கொலை: சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாடு

சிறையில் கை, கால்களை கட்டி கொடூரமாக அடித்து கொலை: சிபிசிஐடி விசாரணை

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 2:06 மணி
Fernandez
Share
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
SHARE

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன் (35) கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரி வர்மன், தனது வீட்டருகே பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்றதாக அவர் தென் தாமரை குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 13 அன்று, சிறையில் விசாரணை கைதியாக இருந்த சபரி வர்மன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். பின்னர், அவர் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமானது.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக நாகர்கோவில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 விசாரணை கைதிகள் என மொத்தம் 11 பேர் நேசமணி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் நாங்குநேரி கிளைச் சிறையிலும், 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். கொலை நடைபெற்ற நாகர்கோவில் சிறைச்சாலை மற்றும் சபரி வர்மனின் குடும்பத்தினரிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை நடைபெற்ற அன்று இரவு, சபரி வர்மன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என சத்தமாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மற்ற கைதிகள் சிறை வார்டனிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த நேரத்தில், சமையல் வேலையை முடித்துவிட்டு சிறை அறைக்கு வந்திருந்த 8 கைதிகளிடம், சபரி வர்மனின் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த வார்டன்கள் அவரைத் தாக்கும்படி கூறியுள்ளனர். வார்டன்களின் தூண்டுதலால், கைதிகள் சபரி வர்மனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில், சபரி வர்மனின் லுங்கியை அவிழ்த்து, அவரது கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு தாக்கியுள்ளனர். அப்போது, சபரி வர்மன் கட்டியிருந்த லுங்கியை அவிழ்க்க முயன்றபோது, ஆத்திரமடைந்த கைதிகள் லுங்கியை கிழித்து அவரது கைகளைக் கட்டி மேலும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி சபரி வர்மன் உயிரிழந்ததாக சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் சிறை நிர்வாகத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CBIID InvestigationMurderNagercoil JailSabari Varmanகைதுகொலைசபரி வர்மன்சிபிசிஐடி விசாரணைநாகர்கோவில் சிறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வதந்தி சீசன் 2 டிரெய்லர் வெளியீடு வதந்தி சீசன் 2: சசிகுமாரின் மிரட்டல் நடிப்பில் டிரெய்லர் வெளியீடு!
Next Article திருப்பதி கோதண்டராமர் கோவில் திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவம்: ஆகஸ்ட் 7-10 வரை சிறப்பு விழா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம் குறித்த செய்திகள்

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: முக்கிய நோக்கம் என்ன?

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026 விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. தாமதமான பதிவுகளுக்கு…

ஜூலை 31, 2026

எதிர்க்கட்சி முழக்கங்களால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; பிறப்பு, இறப்பு மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்…

ஜூலை 31, 2026

பாஜகவில் சேர மிரட்டல்: சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

டெல்லியில் போராட்டம் நடத்தியபோது பாஜகவில் சேர அழுத்தம்…

ஜூலை 31, 2026

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் கோரிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது காயமடைந்த காவலர்களின்…

ஜூலை 31, 2026

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ…

ஜூலை 31, 2026

You Might Also Like

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில் மீட்கப்பட்ட பெண்
தமிழ்நாடு

திருவண்ணாமலை குகைப்பாதையில் பெண் சிக்கினார்: பக்தர்கள் மீட்டனர்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில் பெண் சிக்கிய நிலையில், பக்தர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
திருநங்கை துணை நடிகை கயல்விழி மற்றும் அவரது காதலன் பிரவீன்ராஜ் திருமண புகைப்படங்கள்
தமிழ்நாடு

திருநங்கை துணை நடிகை கயல்விழியின் திருமணம்: காதலனுடன் இணைந்த ஜோடி

நாமக்கல் துணை நடிகை திருநங்கை கயல்விழி, திருவள்ளூர் ஐடி ஊழியர் பிரவீன்ராஜை இன்று திருமணம் செய்துகொண்டார். 5 வருட காதலுக்குப் பிறகு இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம்…

1 Min Read
சென்னையில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்கும் காட்சி
தமிழ்நாடு

4 மாதங்களில் 2வது உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சென்னையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில், 4 மாதங்களில் 2வது முறையாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் கைது செய்யப்பட்டார்
தமிழ்நாடு

யூடியூப் ஊழியரை மிரட்டிய ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் கைது

'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் யூடியூப் ஊழியரை மிரட்டி பணம் கேட்டதாகக் கைது. அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?