கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சம்பவம் திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியின் பொறுப்பாளராக சேகர்பாபு நியமிக்கப்பட்டிருந்தார்.
சேகர்பாபுவின் தன்னிச்சையான நடவடிக்கைகளே மு.க. ஸ்டாலினின் தோல்விக்கு முக்கிய காரணம் என திமுக உடன்பிறப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். கட்சித் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளை அவர் மதிக்கவில்லை என்றும், கள நிலவரத்தையும் எதிரணியின் பலத்தையும் சரியாக கணிக்கத் தவறினார் என்றும் அடிமட்டத் தொண்டர்கள் விமர்சித்துள்ளனர்.
கொளத்தூரில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத தோல்விக்கான உண்மையான காரணம் குறித்து திமுக தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றரை மாதங்கள் ஆகியும் இதுவரை உண்மை வெளிவராதது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தோல்விக்கான பொறுப்பை சேகர்பாபு ஏற்க வேண்டும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விரைவில் உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.