MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை: வீடியோ ஆதாரத்துடன் மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை: வீடியோ ஆதாரத்துடன் மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை: வீடியோ ஆதாரத்துடன் மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர்

இந்தியா

மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை: வீடியோ ஆதாரத்துடன் மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 2, 2026 10:54 காலை
Fernandez
Share
கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர் ரகுவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடம்
மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர் ரகுவின் உடலை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
SHARE

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (41). இவர் சிக்கமகளூருவில் சொந்தமாக பேக்கரி நடத்தி வந்தார். இவருக்கும், இவரது மனைவி ககனாவிற்கும் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.தொழில் நிமித்தமாக ரகு தனது குடும்பத்துடன் சிக்கமகளூருவில் வசித்து வந்தார். சமீப காலமாக, தனது மனைவி ககனாவின் நடத்தையில் ரகுவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு, குடும்பத் தகராறு முற்றியுள்ளது.

சம்பவத்தன்று, தனது மனைவியுடன் காரில் கேசகோடு கிராமத்திற்கு புறப்பட்ட ரகு, வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், காரிலேயே மனைவியை ரகு கொலை செய்துள்ளார். இந்தக் கொலையை அவர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், மாலை சுமார் 6.30 மணியளவில் கேசகோடு கிராமத்திற்கு வந்த ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் மனைவியை கொன்றுவிட்டதாகவும், கொலை செய்த வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில், கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் ரகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, ரகுவின் உறவினர்கள் அவரை கிராமத்தில் தேடினர். அப்போது, அவர் கிராம எல்லையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அரேஹள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரகுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரகு தனது மனைவி ககனாவின் உடலை கிராமத்திற்கு அருகில் உள்ள யகட்டி கால்வாயில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்காக, மீட்பு படையினரை வரவழைத்து கால்வாயில் ககனாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ரகு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியதும், கொலை வீடியோவை அனுப்பியதும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:HassanHusband SuicideVideo EvidenceWife Murderகணவர் தற்கொலைகுடும்ப தகராறுபேலூர்மனைவி கொலைவீடியோ ஆதாரம்ஹாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கிரிக்கெட் விமர்சகர் தீப் தாஸ்குப்தா இலங்கையில் இந்திய அணியின் பலவீனம்: தீப் தாஸ்குப்தா கவலை
Next Article விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழைத்தார்களை ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் கர்நாடக அரசு

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு

தமிழகத்திற்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்ட…

செப்டம்பர் 26, 2026

அமெரிக்க கூலிப்படை வீரர் நாடு செல்ல அனுமதி: மோடி மீது காங்கிரஸ் தாக்கு

தீவிரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க…

செப்டம்பர் 26, 2026

வாக்காளர் பட்டியலில் 2.73 கோடி ஜென்-ஸி இளைஞர்கள்: தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பணியின் கீழ், 18…

செப்டம்பர் 26, 2026

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் 4 பேர் படுகொலை: ஆயுததாரிகள் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு

மணிப்பூரில் ஒரு கிராமத்திற்குள் புகுந்த ஆயுதமேந்திய நபர்களால்…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்
இந்தியா

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த 4 ஆண்டுகளில் அவரது மிகக் குறுகிய உரையாகும். அவரது தலைப்பாகையும் கவனத்தை ஈர்த்தது.

2 Min Read
இந்தியா

நீட் தேர்வு முறையில் மாற்றம்: கணினி வழி தேர்வு, வயது வரம்பு?

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு முறையில் முக்கிய மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. கணினி வழி தேர்வு, வயது வரம்பு நிர்ணயம் போன்ற பரிந்துரைகள் மத்திய சுகாதார…

1 Min Read
மணிப்பூர் மாநில அரசு அலுவலகம்
இந்தியா

உலகக்கோப்பை கால்பந்து: மணிப்பூரில் நாளை விடுமுறை அறிவிப்பு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியையொட்டி, மணிப்பூர் மாநிலத்திலும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள, மேகாலயாவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2 Min Read
ஏர் இந்தியா விமானம்
இந்தியா

ஏர் இந்தியா புதிய சர்வதேச சேவையை அறிமுகம் செய்கிறது

ஏர் இந்தியா தனது புதிய சர்வதேச பயணச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இது பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளையும் உலகளாவிய இணைப்பையும் வழங்கும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?