MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கேரளாவில் எலிக்காய்ச்சல்: 2 பேர் பலி, 9 பேருக்கு தீவிர சிகிச்சை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கேரளாவில் எலிக்காய்ச்சல்: 2 பேர் பலி, 9 பேருக்கு தீவிர சிகிச்சை

தமிழ்நாடு

கேரளாவில் எலிக்காய்ச்சல்: 2 பேர் பலி, 9 பேருக்கு தீவிர சிகிச்சை

Admin
Last updated: ஜூன் 30, 2026 11:11 காலை
Admin
Share
SHARE

கேரளாவில் டெங்கு, மலேரியா, ஷிகெல்லா போன்ற நோய்களைத் தொடர்ந்து லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 11,776 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதாக கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல் அறிகுறி காரணமாக கேரளா முழுவதும் ஒரே நாளில் மட்டும் 11,776 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணூர் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து, இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 9 பேருக்கு தற்போது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லெப்டோஸ்பைரோசிஸ் என்பது பாக்டீரியாவால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை தொற்று நோயாகும். நோய் தொற்று பாதித்த எலி, நாய் போன்ற விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகள் அல்லது தேங்கியுள்ள மழைநீரை நேரடியாகத் தொடுவதன் மூலம் இது மனிதர்களுக்குப் பரவுகிறது. தோலில் உள்ள வெட்டுக்கள், காயங்கள் அல்லது கண், மூக்கு வழியாக இந்த பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைகின்றன. பருவமழைக் காலம் என்பதால் தேங்கியுள்ள தண்ணீரில் பொதுமக்கள் இறங்குவதைத் தவிர்க்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறும் கேரள சுகாதாரத் துறை தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rat Fever Keralaஎலிக்காய்ச்சல்கேரளாவில்சுகாதாரம்லெப்டோஸ்பைரோசிஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கால் விரல்கள் போனது, பணமில்லை: பாவா லட்சுமணன் உருக்கமான பேட்டி
Next Article அமோனியா வாயு கசிவு: குணமடைந்த 64 பேர் அசாம் பயணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பதவி கிடைக்காததால் த.வெ.க சென்றனர்: எஸ்.பி.வேலுமணி

கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்காததால் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியே

1 Min Read
தமிழ்நாடு

போரூர் அருகே மரம் அறுக்கும் இயந்திரத்தால் வாலிபர் தற்கொலை

போரூர் அருகே வடமாநில இளைஞர் ஒருவர், மரம் அறுக்கும் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

1 Min Read
தமிழ்நாடு

சிவகங்கை: ஆடு மேய்க்கச் சென்ற மாணவி சடலம்: மர்ம மரணம்?

சிவகங்கை அருகே ஆடு மேய்க்கச் சென்ற 7-ம் வகுப்பு மாணவி ஊருணியில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம மரணம் குறித்து போலீசார்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?