MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்

Admin
Last updated: மே 26, 2026 7:09 மணி
Admin
Share
SHARE

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, வி.டி.சதீசன் கேரளாவின் புதிய முதல் மந்திரியாக கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு, வி.டி.சதீசன் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சென்றடைந்த அவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். சட்டசபை தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தலைவர்களுக்கு அவர் இந்த சந்திப்பின் போது நன்றி தெரிவித்தார்.

மேலும், முதல்-மந்திரி சதீசன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கேரளம் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாக சதீசன் தெரிவித்தார். மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, கேரளாவின் பாரம்பரிய நடன நாடகமான கதகளியை சித்தரிக்கும் ஒரு சிறிய நடனக் கலைஞரின் சிலையை முதல்-மந்திரி சதீசன் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிக்குப் பிறகு, சதீசன் பிரதமரை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Politicsஅரசியல்காங்கிரஸ்கேரளாபிரதமர் மோடிவி.டி.சதீசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள் இணைவது நம்பகத்தன்மையை பாதிக்கும் – திருமாவளவன்
Next Article எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபை தேர்தலில்…

1 Min Read
முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

ஸ்டாலின் பெயரை நீக்க முடியாது: அன்பரசன் ஆவேசம்

முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட கல்வெட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, ஒரு வாரத்திற்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்…

2 Min Read
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் மீது கூடுதல் சுமை ஏற்றப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
இந்தியா

கப்பலில் ‘ஐ லவ் பாகிஸ்தான்’ – தேச துரோக வழக்குப்பதிவு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், கப்பலில் 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பாக தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?