MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சித்தராமையா ராஜினாமா: டி.கே. சிவக்குமார் முதல்வராகிறார்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சித்தராமையா ராஜினாமா: டி.கே. சிவக்குமார் முதல்வராகிறார்?

இந்தியா

சித்தராமையா ராஜினாமா: டி.கே. சிவக்குமார் முதல்வராகிறார்?

Admin
Last updated: மே 28, 2026 1:01 மணி
Admin
Share
SHARE

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்வதாக தகவல் வெளியானது. இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா முதலில் மறுத்ததால், இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவக்குமார், கே.சி. வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சித்தராமையாவிடம் கோரப்பட்டதாக தகவல் வெளியானது. அவர் ராஜினாமா செய்த பிறகு, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் ஒரு சமரசத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. பெங்களூருவில் சித்தராமையாவை சந்தித்த பிறகு, அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே இதனை உறுதிப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ இல்லமான காவரியில் காலை உணவு சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், ராமலிங்க ரெட்டி, ஹெச்.கே. பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, முதல்வர் பதவியில் இருந்து விலக இருப்பதாக சித்தராமையா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை ஆரத்தழுவி, அவரது கால்களைத் தொட்டு ஆசி பெற்றார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதால், சித்தராமையா எப்போது ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressKarnataka Politicsஅரசியல்கர்நாடகாசித்தராமையாடி.கே. சிவக்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சாலைகளில் தொழுகைக்கு தடை: உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்
Next Article அதிமுகவில் ஒற்றுமை: எஸ்.பி. வேலுமணி பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாடு முழுவதும் தீவிர ஏற்பாடுகள்!

நாடு முழுவதும் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செல்போன் செயலிகள் மற்றும் ஆன்லைன் சுய கணக்கெடுப்பு முறை அறிமுகம்.

1 Min Read
இந்தியா

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை மலையிலிருந்து தள்ளி கொன்ற பெண் கைது

திருமணம் செய்ய விருப்பமில்லை எனக்கூறிய வருங்கால கணவரை, காதலனுடன் சேர்ந்து மலையிலிருந்து தள்ளி கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

1 Min Read
அரசியல்

சனாதனம் ஒரு வாழ்க்கை முறை: உதயநிதிக்கு நடிகர் அர்ஜூன் பதிலடி

சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை என்றும், அதைப்பற்றி புரிதல் இல்லாமல் பேசக்கூடாது என்றும் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்

மேற்கு வங்கத்தில் 100க்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவில் இணையும் தலைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?