MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எஸ். ஜானகியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எஸ். ஜானகியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எஸ். ஜானகியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்!

தமிழ்நாடு

எஸ். ஜானகியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்!

Fernandez
Last updated: ஜூலை 12, 2026 7:02 காலை
Fernandez
Share
பாடகி எஸ். ஜானகி
பாடகி எஸ். ஜானகி
SHARE

இன்றைய தலைமுறையினரும் தவறாமல் கேட்க வேண்டிய எஸ். ஜானகியின் மறக்க முடியாத 10 பாடல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1991ஆம் ஆண்டு வெளியான 'தளபதி' திரைப்படத்தில், இளையராஜா, ரஜினி, வைரமுத்து கூட்டணியில் உருவான 'சின்னத் தாய் அவள்' பாடலை ஜானகியம்மா பாடியிருப்பார். சிறு வயதில் குழந்தையைத் தொலைத்து, முதுமையில் அதனைத் தேடும் தாயின் குரலில் மென்சோகத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.

2014ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற 'அம்மா, அம்மா… நீ எங்க அம்மா' பாடலில், இறந்த பிறகு மகனை ஆற்றுப்படுத்தும் தாயின் குரலாக ஜானகியம்மா பாடியிருப்பார். தாயை இழந்தவர்களுக்கு இவரின் குரல் என்றும் ஆறுதல் அளிக்கும்.

1998ஆம் ஆண்டு மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான 'உயிரே' படத்தில் வரும் 'நெஞ்சினிலே, நெஞ்சினிலே' பாடல், காதலில் தவித்து, திருமணக் கனவில் மூழ்கியிருக்கும் இளம் பெண்ணின் ஏக்கத்தை ஜானகியம்மா தன் குரலால் உயிரூட்டியிருப்பார்.

1985ஆம் ஆண்டு பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் வெளியான 'முதல் மரியாதை' படத்தில், 'பூங்காற்று திரும்புமா', 'வேட்டி வேறு வாசம்' உள்ளிட்ட இரண்டு பாடல்களை ஜானகியம்மா பாடியிருப்பார். இதில், சிவாஜி கணேசனின் தனிமையையும் சோகத்தையும் ராதாவிற்கு ஆறுதல் கூறும் விதமாக 'சுக ராகம் சோகம் தானே…' என அவர் பாடியிருப்பார்.

1980ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான 'ஜானி' படத்தில், ரஜினி – ஸ்ரீதேவி காதலைச் சொல்லும் 'காற்றில் எந்த கீதம்' பாடல் இடம்பெற்றது. காதலன் எப்போது திரும்புவான் என்ற ஏக்கத்துடனும், காதல் தருணங்களை நினைத்து சோகத்துடனும் காதலி பாடும் காட்சிகளுக்கு ஜானகி அருமையாக உயிர் கொடுத்திருப்பார்.

1993ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான 'மறுபடியும்' படத்தில் இடம்பெற்ற 'ஆசை அதிகம் வச்சு…' பாடல், பெண்கள் மத்தியில் இன்றும் கொண்டாட்டப் பாடலாக விளங்குகிறது. காதல், சோகம், தாய்மை போன்ற உணர்வுகளுக்கு அப்பால், பெண்களின் கொண்டாட்ட உணர்வை ஜானகி இந்த பாடலில் வெளிப்படுத்தியிருப்பார். 'சின்னப்பொண்ணு நான்… செந்தூரப்பூ நான்…' என ஒரு பெண்ணின் கர்வத்துடன் கவித்துவமாக பாடியிருப்பார்.

1978ஆம் ஆண்டு வெளியான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில், கமல்ஹாசன் – ஜானகி கூட்டணியில் உருவான 'நினைவோ ஒரு பறவை' பாடல், காதலன் – காதலி தங்களின் அன்யோன்யத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்திருக்கும். பாடகர் கமல்ஹாசனுக்குக் கடும் போட்டியாக, காதலியின் காதல் வேட்கையை ஜானகியம்மா தன் குரலில் வெளிப்படுத்தியிருப்பார்.

1999ஆம் ஆண்டு வெளியான 'சங்கமம்' திரைப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜானகி பாடிய 'மார்கழி திங்கள் அல்லவா' பாடல், பாரம்பரிய பரதநாட்டிய நாயகி, கிராமிய இசையில் சிறந்து விளங்கும் தன் காதலன் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.

1999ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'ஜோடி' திரைப்படத்தில் 'காதல் கடிதம் தீட்டவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருப்பார். உன்னி மேனன் பாடியிருந்தாலும், அவரை மிஞ்சும் அளவுக்கு ஜானகியின் குரல் இந்த பாடலுக்கு மேலும் மெருகூட்டியிருக்கும்.

1962ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் – சாவித்ரி நடிப்பில், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் வெளியான 'பாத காணிக்கை' படத்தில் இடம்பெற்ற 'பூஜைக்கு வந்த மலரே வா' பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸுடன் இணைந்து ஜானகி பாடியிருப்பார்.

இவை தவிர, 'சித்திரமே நில்லடி', 'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன', 'மாம்பழத்து வண்டு', 'ஆண்டொன்று போனால்', 'கூந்தலிலே நெய் தடவி', 'அழகுக்கு மறு பெயர் பெண்ணா', 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்', 'அங்கே வருவது யாரோ', 'தேன் சிந்துதே வானம்', 'நான் பேச வந்தேன்', 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி', 'நினைவோ ஒரு பறவை', 'ஒரு வானவில் போலே', 'ஆழக்கடலில் தேடிய முத்து' போன்ற பல பாடல்களும் எஸ். ஜானகியின் குரலில் என்றும் நிலைத்து நிற்கும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Janaki SongsTamil Songsஎஸ். ஜானகிசங்கமம்சிகப்பு ரோஜாக்கள்தமிழ் பாடல்கள்தளபதிபாத காணிக்கைமுதல் மரியாதைவேலையில்லா பட்டதாரிஜானகி பாடல்கள்ஜோடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முட்டையின் மஞ்சள் கருவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய தகவல் முட்டையின் மஞ்சள் கரு: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!
Next Article இளையராஜா மற்றும் பாடகி ஜானகி இணைந்து பாடும் காட்சி இளையராஜா – ஜானகி: மறக்க முடியாத 5 பாடல்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தி.மு.க. வெளியில் வேறு, உள்ளே வேறு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. கட்சி வெளியில் ஒரு மாதிரியாகவும், உள்ளுக்குள் வேறு மாதிரியாகவும் செயல்படுவதாக 'எக்ஸ்' தளத்தில் விமர்சித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

அதிமுக தலைமைக்கு அண்ணாமலையா? கே.பி.முனுசாமி விளக்கம்

அதிமுக தலைமைக்கு அண்ணாமலையை நியமிக்க வேண்டும் என வெளியான செய்திக்கு கே.பி.முனுசாமி காட்டமாக பதிலளித்துள்ளார். முதல்வர் விஜயின் நடவடிக்கைகளால் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது…

2 Min Read
தமிழ்நாடு

முதலை தாக்கி பெண் பலி: புளோரிடாவில் அதிர்ச்சி சம்பவம்

புளோரிடாவின் ஈகான்லாகாச்சி ஆற்றில் முதலை தாக்கி பிரிட்னி கிளார்க் என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலை தாக்கியதில் அவரது இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை 5 மணிக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அவர்களால் வெளியிடப்படுகிறது. இது மாநிலத்தின் பொருளாதாரம் குறித்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?