MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - உலகம் - ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்

உலகம்

ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்

Admin
Last updated: மே 24, 2026 4:35 மணி
Admin
Share
SHARE

ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று பிற்பகல் ஒரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, 'ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று பிற்பகல் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். நமக்கு நீண்டகால பலனளிக்கக் கூடிய ஒரு வரைவுத் திட்டத்தில் நாங்கள் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக நினைக்கிறோம். இந்த விவகாரத்தில் இறுதி முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஈரானின் முழுமையான ஏற்பும், இணக்கமும் தேவைப்படும்' என்று கூறினார்.

'அடுத்த சில மணி நேரங்களில், உலகிற்கு சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க கூடாது என்பதே எங்களின் இறுதி இலக்கு' என்றும் அவர் வலியுறுத்தினார். ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச நீர்வழியாகும். ஆனால், சர்வதேச சட்டங்களை மீறி சர்வதேச நீர்வழியைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களை அழித்துவிடுவோம் என்று ஈரான் அச்சுறுத்துவதாகவும், வளைகுடாவில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து கடந்த 48 மணி நேரத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அது வெற்றி பெற்றால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தும், சுங்கக் கட்டணங்கள் இல்லாமலும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரானிய அணு ஆயுத அச்சுறுத்தலை உலகம் இனி எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதே தங்கள் இறுதி இலக்கு என்றும் மார்கோ ரூபியோ குறிப்பிட்டார். முன்னதாக, புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IranUSAஅணு ஆயுதம்அமெரிக்காஈரான்மார்கோ ரூபியோஹார்முஸ் ஜலசந்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக அழுத்தம்: மாணிக்கம் தாகூர் விளக்கம்
Next Article ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஃபிஃபா 2026: ஈரான் அணிக்கு அமெரிக்கா விசா அனுமதி!

ஃபிஃபா 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் அணிக்கு அமெரிக்கா விசா அனுமதி வழங்கியுள்ளது. இது ஈரான் அணி உலகக் கோப்பையில் விளையாட வழிவகுத்துள்ளது.

0 Min Read
உலகம்

பிரேசிலில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 20 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

1 Min Read
உலகம்

ரஷ்யாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 79 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருள் சேதம்…

1 Min Read
உலகம்

அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்தில் ஜே.டி. வான்ஸ்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி திட்டம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறுகிறது. அமெரிக்க பிரதிநிதி ஜே.டி. வான்ஸ் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?