MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026: 15 வயதில் சிக்ஸர் மன்னனாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்ஸ் அடித்து உலக சாதனை படைத்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026: 15 வயதில் சிக்ஸர் மன்னனாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்ஸ் அடித்து உலக சாதனை படைத்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - IPL 2026: 15 வயதில் சிக்ஸர் மன்னனாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்ஸ் அடித்து உலக சாதனை படைத்தார்

விளையாட்டு

IPL 2026: 15 வயதில் சிக்ஸர் மன்னனாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்ஸ் அடித்து உலக சாதனை படைத்தார்

Admin
Last updated: மே 10, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங்கால் பல உலக சாதனைகளை சுக்குநூறாக உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார். அவர் படைத்த அந்த பிரம்மாண்ட உலக சாதனைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

ஜெய்ப்பூரில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்கினார். முகமது சிராஜ் வீசிய இன்னிங்சின் முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தனது கணக்கை அதிரடியாக தொடங்கினார். தொடர்ந்து ககிசோ ரபாடா வீசிய ஓவரிலும் 2 சிக்சர்களை விளாசினார்.

இந்த போட்டியில் 16 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த 3 சிக்சர்கள் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர் பிளேவில் 30 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா 29 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 வயதிற்கு முன்பாகவே 100 சிக்சர்களை விளாசிய உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற இமாலய உலக சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இவர் முறியடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கீரன் பொல்லார்ட் 843 பந்துகளில் 100 சிக்சர்கள் அடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. ஆனால், வைபவ் வெறும் 514 பந்துகளிலேயே 100 சிக்சர்களை பறக்கவிட்டு பொல்லார்ட் சாதனையை மிக எளிதாக தவிடுபொடியாக்கினார்.

நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 440 ரன்கள் குவித்து மொத்தம் 40 சிக்சர்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் 40 சிக்சர்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா 42 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க வைபவ் இன்னும் 3 சிக்சர்கள் மட்டுமே அடிக்க வேண்டும்.

வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மோசமாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்
Next Article தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

விளையாட்டு

கோலி vs வைபவ்: ஐபிஎல் முதல் 18 போட்டிகளில் அசத்தியது யார்?

ஐபிஎல் தொடக்கத்தில் விராட் கோலி மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் முதல் 18 போட்டிகளின் புள்ளிவிவர ஒப்பீடு: யார் சிறந்து விளங்கினார்கள்?

1 Min Read
விளையாட்டு

IPL 2026: கேஎல் ராகுல் புதிய வரலாற்று சாதனை.. முதல் வீரர் என்ற பெருமை.. முழு விவரம்

டெல்லி: ஐபிஎல் வரலாற்றில் கேஎல். ராகுல் இரண்டு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். 25 இன்னிங்ஸ்களுக்கும் குறைவான போட்டிகளில் பல அணிகளுக்காக 1000 ரன்கள் குவித்த முதல் வீரர்…

2 Min Read
விளையாட்டு

ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து தடுமாற்றம்: நியூசிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட் தேவை

ஓவல் டெஸ்டில் 463 ரன்கள் இலக்கை துரத்தும் இங்கிலாந்து அணி, நான்காம் நாள் முடிவில் 182 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நியூசிலாந்து அணி…

1 Min Read
விளையாட்டு

மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!

பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?