MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐபிஎல் 2026: 15 ஓவரில் 200 ரன்.. ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - ஐபிஎல் 2026: 15 ஓவரில் 200 ரன்.. ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாற்றம்!

விளையாட்டு

ஐபிஎல் 2026: 15 ஓவரில் 200 ரன்.. ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாற்றம்!

Admin
Last updated: மே 27, 2026 10:25 மணி
Admin
Share
SHARE

2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்துள்ளது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் ஒரு கட்டத்தில் 260 – 280 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணி, கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் 243 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

முல்லான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஹைதராபாத் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இவருக்குத் துணையாக துருவ் ஜூரல் 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அசத்தினார். இவர்களின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவிலேயே 200 ரன்களைக் கடந்துவிட்டது.

15 ஓவர் வரை அசுர வேகத்தில் இருந்த ராஜஸ்தான் அணி, ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 14-வது ஓவரில் துருவ் ஜூரல் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டது. கடைசி 5 ஓவர்களில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ராஜஸ்தான் அணியைக் கட்டுப்படுத்தினர். கேப்டன் ரியான் பராக் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரேரா 9 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சில் குறிப்பாக பிரபுல் ஹிஞ்சே 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தாலும், முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சரிவை ஏற்படுத்தினார். ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 64 ரன்களை வாரி வழங்கினார். ராஜஸ்தான் அணி கடைசி 5 ஓவர்களில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்ததால் 243 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஐபிஎல் 2026கிரிக்கெட்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்ராஜஸ்தான் ராயல்ஸ்வைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்
Next Article சேலம்: தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

விளையாட்டு

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு அவமானம்: எப்போது கடைசியாக தொடரை இழந்தது?

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணி அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. கடைசியாக 2023ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்தது.

2 Min Read
விளையாட்டு

ரோகித், சூர்யகுமாருக்கு மட்டும் வேறு நியாயமா? முகமது கையிப் கேள்வி

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து முகமது கையிப் இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார். ரோஹித், சூர்யகுமாருக்கு ஏன்…

2 Min Read
விளையாட்டு

இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!

இந்தியாவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் 16 தொடர் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

2 Min Read
அக்சர் படேல் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கடந்த தருணம்
விளையாட்டு

அக்சர் பட்டேல் சாதனை: டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய ஸ்பின்னர்

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், அக்சர் படேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?