MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’

விளையாட்டு

IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’

Admin
Last updated: மே 9, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

மும்பை: 2026 ஐபிஎல் தொடர் ஒருபுறம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யை கடும் கோபமடையச் செய்துள்ளது. வீரர்கள் தங்களது காதலிகளை அழைத்து வருவது முதல், தடை செய்யப்பட்ட இடங்களில் சிகரெட் பிடிப்பது வரை பல விதிமீறல்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுவதாகக் கருதும் பிசிசிஐ, விரைவில் ஒரு அதிரடி எச்சரிக்கை அறிக்கையை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். ஆனால், இந்த சீசனில் வீரர்களின் தங்கும் அறைகளுக்கும், ஹோட்டல்களுக்கும் சம்பந்தமே இல்லாத பல நபர்கள் வந்து செல்வது பிசிசிஐ-யின் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஊடக மேலாளர் ரோமி பிந்தர், வீரர்கள் அமரும் ‘டக்-அவுட்’ பகுதியில் செல்போன் பயன்படுத்தியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமீறல் ஊழல் தடுப்புப் பிரிவினரைக் கவலையடையச் செய்துள்ளது.

பிசிசிஐ-யை அதிகம் எரிச்சலடையச் செய்திருப்பது ‘காதலி கலாச்சாரம்’ தான். ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்களது காதலிகளுடன் எப்போதும் சுற்றி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதில் பல காதலிகள் சமூக வலைதளங்களில் பெரும் செல்வாக்கு கொண்ட ‘இன்புளுயன்சர்களாக’ இருப்பதால், அணிக்குள் நடக்கும் ரகசியத் தகவல்கள் மற்றும் அணியின் திட்டங்கள் இவர்களின் மூலம் வெளியே கசிய வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அஞ்சுகிறது. இது மேட்ச் பிக்சிங் போன்ற விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், காதலிகள் மற்றும் குடும்பத்தினர் வீரர்களுடன் தங்குவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக், மைதானத்திலேயே ‘வேப்பிங்’ எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் பிடிக்கும் காட்சி கேமராவில் சிக்கியது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணம் எனப் பல முன்னாள் வீரர்கள் விளாசியுள்ளனர். அதுமட்டுமின்றி, சில அணி உரிமையாளர்களும் அதிகாரிகளும் வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா, “இந்த முறை பல அணிகளும் வீரர்களும் விதிமுறைகளைத் துஷ்பிரயோகம் செய்வதைக் கவனித்துள்ளோம். அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் வீரர்களின் அறைகளுக்குச் செல்வது ஊழல் தடுப்பு விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. இதை நாங்கள் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். விரைவில் அனைத்து அணிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இனிமேல் விதிமீறல்களில் ஈடுபடும் அணிகள் மற்றும் வீரர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்
Next Article தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.85 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்தியா vs அயர்லாந்து: சரிந்த டாப் ஆர்டர், சாம்சன் சொதப்பல் – இந்தியா திணறல்

இந்தியா vs அயர்லாந்து இரண்டாவது டி20 போட்டியில், 155 ரன்கள் இலக்கை துரத்தும் இந்திய அணி, சஞ்சு சாம்சன் கோல்டன் டக் உட்பட டாப் ஆர்டர் சொதப்பலால்…

2 Min Read
விளையாட்டு

அயர்லாந்து தொடர் தோல்வி: சுப்மன் கில்லுக்கு ஆதரவாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இளம் வீரர் சுப்மன் கில்லை மீண்டும் டி20 அணியில் சேர்க்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர்…

2 Min Read
தமிழக வீரர் ஆர். சாய் கிஷோர்
விளையாட்டு

சிஎஸ்கே-வுக்கு மாற சாய் கிஷோர் கோரிக்கை: குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகத்திடம் தகவல்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள தமிழக வீரர் ஆர். சாய் கிஷோர், சிஎஸ்கே அணியில் இணைய விருப்பம் தெரிவித்து, நிர்வாகத்திடம் கோரிக்கை…

3 Min Read
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் ஜப்பான் கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்

ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானை ஜப்பான் பந்துவீச்சில் திணறடித்தாலும், பேட்டிங்கில் சொதப்பி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?