MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் நடுவானில் இன்ஜின் கோளாறு: இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் நடுவானில் இன்ஜின் கோளாறு: இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் நடுவானில் இன்ஜின் கோளாறு: இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தமிழ்நாடு

சென்னையில் நடுவானில் இன்ஜின் கோளாறு: இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 12, 2026 1:25 மணி
Fernandez
Share
சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
SHARE

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடுவானில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு 10 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமாக இரவு 11:30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தை வந்தடையும். அந்த வகையில், நேற்று இரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் 224 பயணிகள் மற்றும் ஐந்து விமான ஊழியர்கள் என மொத்தம் 229 பேர் பயணித்தனர்.

விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் இடது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. மேலும், சிறிய அளவில் எண்ணெய் கசிவும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

விமானியின் தகவலையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக ஓடுபாதைப் பகுதியில் அவசர நிலையை அறிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினர் மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன. அதுவரை, அந்த விமானம் தரையிறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.

அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்ட பிறகு, விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இரவு 11.37 மணிக்கு அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதில் பயணித்த 229 பேரும் எந்தவித பாதிப்பும் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

விமானம் தரையிறங்கிய பிறகு, விமானப் பொறியாளர்கள் குழுவினர் உடனடியாக விமானத்திற்குள் சென்று பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த விமானம் உடனடியாக மீண்டும் பறப்பதற்கு தகுதியற்றது என தெரியவந்ததால், நள்ளிரவு 12 மணியளவில் அது அதிகாரப்பூர்வமாக இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அந்த விமானம் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.

இந்த அசம்பாவிதம் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தும்படி டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai AirportDGCAEngine FailureIndigo Airlinesஅவசர தரையிறக்கம்இண்டிகோ விமானம்என்ஜின் கோளாறுசென்னை விமான நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியாவில் பல்வேறு கார்களின் தொகுப்பு இந்திய கார் வரலாறு: அம்பாசிடர் முதல் இ.வி வரை ஒரு பார்வை
Next Article பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேவையற்ற விளம்பர நாடகம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பேருந்து ஓட்டுநருடன் தப்பிச் செல்லும் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி மேகா

பிரபல யூடியூபர் மனைவி ஓட்டம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி மேகா, பேருந்து ஓட்டுநருடன் பணம்,…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை
தமிழ்நாடு

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை: 781 பேர் கைது

தமிழகம் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை தீவிர நடவடிக்கை. கடந்த ஒரு வாரத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 781 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்…

3 Min Read
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தல்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு. பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், சட்டவிரோத கனிம கடத்தலுக்கு 100 மடங்கு அபராதம் விதிக்க வலியுறுத்தல்.

2 Min Read
தமிழ்நாடு

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

முதலீடுகள் வெளியேறினவா? சட்டசபையில் பதிலளிக்க தயார் – அமைச்சர் கீர்த்தனா

தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுவது குறித்து, சட்டசபையில் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?