MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரிக்ஸ் நாடுகள் உதவட்டும்: எரிபொருள், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ஜெய்சங்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரிக்ஸ் நாடுகள் உதவட்டும்: எரிபொருள், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ஜெய்சங்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பிரிக்ஸ் நாடுகள் உதவட்டும்: எரிபொருள், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ஜெய்சங்கர்

இந்தியா

பிரிக்ஸ் நாடுகள் உதவட்டும்: எரிபொருள், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ஜெய்சங்கர்

Admin
Last updated: மே 15, 2026 9:39 காலை
Admin
Share
SHARE

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், எரிபொருள், உணவு தானியங்கள் மற்றும் உரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு, தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என விரிவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் நேற்று பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி, பிரேசில் வெளியுறவு அமைச்சர் மரியோ வியா்ரா, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகினோ, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் ரொனால்டு லாமோலா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீக்கு பதிலாக சீன தூதர் சூ பெய்ஹாங் மாநாட்டில் பங்கேற்றார்.

மாநாட்டிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஜெய்சங்கர், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களால் வளரும் நாடுகள் சந்திக்கும் சவால்களை சுட்டிக்காட்டினார். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், உலகளவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச சட்ட விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு-நாடுகள் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

போர்களால் பல்வேறு நாடுகளில் எரிபொருள், உணவு தானியங்கள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும், இதனால் நிதிச் சுமை அதிகரித்துள்ளதையும், சுகாதாரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதையும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பருவநிலை மாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தி, அனைத்து நாடுகளுக்கும் தொழில்நுட்பங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BRICSஉணவு தானியம்எரிபொருள் தட்டுப்பாடுபிரிக்ஸ்வெளியுறவு அமைச்சர்கள் மாநாடுஜெய்சங்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அவசர கோரிக்கை!
Next Article நீலகிரி: 27 டாஸ்மாக் கடைகள் மூடல் – அதிரடி உத்தரவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்த செய்தி

டாஸ்மாக் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.…

ஆகஸ்ட் 23, 2026

பவன் கல்யாண் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா பயணம்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், வலது…

ஆகஸ்ட் 23, 2026

வாழும் கலை அமைப்புக்கு விதிக்கப்பட்ட ரூ.5 கோடி அபராதம் ரத்து

2016ல் யமுனை நதிக்கரையில் நடைபெற்ற உலக கலாச்சார…

ஆகஸ்ட் 23, 2026

இந்தியாவை உலகின் ஆய்வகமாக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் அனுப்ரியா படேல்

அகமதாபாத்தில் நடைபெற்ற 'ஹெல்த்கேர் சம்மிட் 2026' மாநாட்டில்…

ஆகஸ்ட் 23, 2026

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்?…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தானே மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
இந்தியா

தானே மாவட்டத்தில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் 18 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
இந்தியா

திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

மத்திய பிரதேசத்தில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்வதாக கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்று…

1 Min Read
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே
இந்தியா

இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம் பெங்களூருவில்: அமைச்சர் தகவல்

இந்தியாவின் முதல் அரசு சார்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம் பெங்களூருவில் அமைக்கப்படும் என கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? - அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?Published by:Last Updated:Apr 27, 2026 6:26 PM ISTபுதுச்சேரியில் இருந்து ஒருவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?