MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் மாபெரும் சாதனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் மாபெரும் சாதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் மாபெரும் சாதனை!

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் மாபெரும் சாதனை!

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 27, 2026 3:23 மணி
Sri Prem Kumar R
Share
இலங்கை கிரிக்கெட் வீரர் சோனல் தினுஷா பேட்டிங் செய்யும் காட்சி
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த இலங்கை வீரர் சோனல் தினுஷா
SHARE

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இலங்கை வீரர் சோனல் தினுஷா அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவரின் 26 ஆண்டுகால சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 100 மற்றும் 84 ரன்கள் எடுத்த தினுஷா, தொடர்ந்து இரண்டாவது டெஸ்டில் 103 ரன்கள் குவித்தார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து, டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்கள் குவித்த உலகின் இரண்டாவது பேட்டர் என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

முன்னதாக, 2000ஆம் ஆண்டில் இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் தொடரில், ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் டெல்லி டெஸ்டில் 183* மற்றும் 70 ரன்களையும், நாக்பூர் டெஸ்டில் 55 மற்றும் 232* ரன்களையும் குவித்து இந்தச் சாதனையை எட்டினார்.

தற்போது சோனல் தினுஷா, காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 100 மற்றும் 84 ரன்களும், கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 103 மற்றும் 88* ரன்களும் எடுத்து பிளவரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்களைக் குவித்த மூன்றாவது இலங்கை பேட்டர் என்ற பெருமையையும் சோனல் தினுஷா பெற்றுள்ளார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர்.

இந்தியாவிற்கு எதிரான தனது முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்கள் எடுத்த முதல் ஆசிய பேட்டர் என்ற தனித்துவமான பெருமையையும் தினுஷாவின் இந்த அரைசதம் பெற்றுத் தந்துள்ளது. இதற்கு முன்பு, இரண்டு இங்கிலாந்து மற்றும் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் மட்டுமே இந்தியாவிற்கு எதிராகத் தங்கள் முதல் நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேல் ரன்களைக் குவித்திருந்தனர்.

இந்தியாவிற்கு எதிரான தனது முதல் மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 80 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த டெஸ்ட் வரலாற்றின் மூன்றாவது பேட்டராகவும் சோனல் தினுசா திகழ்கிறார். இதற்கு முன்பு எவர்டன் வீக்ஸ் மற்றும் ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricket RecordIND vs SLSonal Dinuwaஇந்தியாஇலங்கைகிரிக்கெட் சாதனைசோனல் தினுஷாடெஸ்ட் கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செப்டம்பர் மாதத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு குறித்த செய்தி செப்டம்பரில் 3 நாட்கள் தொடர் விடுமுறை: கொண்டாட்டத்தில் மக்கள்!
Next Article வீட்டில் வளர்க்கப்படும் கொழுந்து வெத்தலை செடிகள் வீட்டிலேயே கொழுந்து வெத்தலை வளர்க்க எளிய குறிப்புகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து: 48 அணிகள், 104 போட்டிகள் – முழு அட்டவணை வெளியீடு!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறுகிறது. 48 அணிகள், 104 போட்டிகள், 16 நகரங்கள் பங்கேற்கின்றன. ஜூன் 12 முதல்…

1 Min Read
ஸ்பெயின் கிரிக்கெட் அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டம்
விளையாட்டு

ஸ்பெயின் புதிய உலக சாதனை: கிரிக்கெட்டில் தொடர் 21 வெற்றிகள்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 21 வெற்றிகள் பெற்று ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை ஸ்பெயின் முறியடித்தது. 2028 டி20 உலகக்கோப்பைக்கான ஐரோப்பிய தகுதிச் சுற்றில் பின்லாந்தை வீழ்த்தி…

2 Min Read
ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி
விளையாட்டு

ஐபிஎல்: ஜனவரியில் தொடங்கலாம்.. 94 போட்டிகள்.. லலித் மோடி பரிந்துரை

ஐபிஎல் தொடரை ஜனவரியில் தொடங்கி, 94 போட்டிகளுடன் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக ஐசிசி தலைவர்…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல்: 4வது வரிசையில் சதம் அடித்த முதல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் வரலாற்றில் 4-வது வரிசையில் களமிறங்கி சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?