MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியா vs இங்கிலாந்து: முதல் டி20-க்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு – முக்கிய வீரர் விலகல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியா vs இங்கிலாந்து: முதல் டி20-க்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு – முக்கிய வீரர் விலகல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியா vs இங்கிலாந்து: முதல் டி20-க்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு – முக்கிய வீரர் விலகல்

விளையாட்டு

இந்தியா vs இங்கிலாந்து: முதல் டி20-க்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு – முக்கிய வீரர் விலகல்

Admin
Last updated: ஜூலை 1, 2026 8:33 காலை
Admin
Share
SHARE

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜூலை 1) செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த முதல் போட்டிக்கு இங்கிலாந்து அணி தனது பிளேயிங் லெவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து மண்ணில் 0-2 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்துள்ள இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அறிவித்துள்ள பிளேயிங் லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், லூக் வுட்.

மறுபுறம், இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்கத் தவறியதால், இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பெல்ஃபாஸ்டில் நடந்த முதல் போட்டியில் 20 பந்துகளில் 49 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து இந்திய உதவி பயிற்சியாளர் ராயன் டென் டோஸ்கேட் கூறுகையில், 'வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முற்றிலும் தயாராக இருந்தாலும், மற்ற வீரர்களைப் போல அவரும் உரிய நடைமுறைகளைக் கடந்துதான் வர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்திய அணியின் தொடக்க வரிசையை பலப்படுத்த வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 1 அன்றும், அடுத்தடுத்த போட்டிகள் ஜூலை 4, 7, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மான்செஸ்டர், நாட்டிங்ஹாம், பிரிஸ்டல் மற்றும் சவுதாம்டன் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இங்கிலாந்துஇந்தியாகிரிக்கெட்டி20விளையாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வணிக சிலிண்டர் விலை ரூ.172.50 குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி
Next Article சென்னையில் ரூ.15 கோடி கொகைன் கடத்தல்: கென்ய பெண் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

யோர்க்ஷயர் அணிக்காக பந்துவீசும் குல்தீப் யாதவ்
விளையாட்டு

இங்கிலாந்து மண்ணில் கலக்கிய குல்தீப் யாதவ்: இந்திய அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றம்?

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், யோர்க்ஷயர் அணிக்காக அறிமுகப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் மானவ் சுதர் பந்து வீசுகிறார்
விளையாட்டு

10 விக்கெட் வீழ்த்தி இலங்கையை சுருட்டிய 24 வயது இந்திய புயல் மானவ் சுதர் !

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 24 வயது இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளார்.

1 Min Read
விளையாட்டு

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு

இந்திய துப்பாக்கி சுடும் வீரரும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவருமான ரந்தீர் சிங் (79) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு…

1 Min Read
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையை வென்ற கொண்டாட்டம்
விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை: 7வது முறை ஆஸ்திரேலியா சாம்பியன்!

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பெத் மூனி, ஷிவர்-பிரண்ட், கெம்ப் சிறப்பான ஆட்டம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?