இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இரண்டரை நாட்களுக்குள் போட்டி முடிவடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா, இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய அவர், 'இது எங்களுக்கு ஒரு கடினமான நாள் மற்றும் கடினமான போட்டியாக அமைந்தது. போட்டியின் ஆரம்பத்திலிருந்தே, பந்துவீச்சில் எங்களிடம் சரியான ஒழுக்கம் இல்லை. அதனால் இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறப்பாக விளையாடியது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த வகை போட்டிகளில் எங்களுக்குப் போதிய அனுபவம் இல்லை. இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், ஏனென்றால் எங்களுக்கு இந்த வடிவிலான போட்டிகளில் விளையாட போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்திய அணி அவர்களின் சொந்த மண்ணில் மிகவும் வலிமையான அணி என்பது அனைவருக்கும் தெரியும்' என்று கூறினார்.
இந்தப் போட்டி எங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அழுத்தமான சூழலில் எப்படி விளையாடுவது என்பதை நாங்கள் பழகிக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஏனெனில், நாம் வெற்றி பெறத் தொடங்கும்போது சவால்கள் இன்னும் கடினமாகிக்கொண்டே இருக்கும். எங்களிடம் சில நேர்மறையான விஷயங்களும் இருந்தன. குறிப்பாக சலீம், சுற்றுப்பயணத்தின் இடையில் அவருக்குக் காயம் ஏற்பட்டாலும், அவர் மீண்டு வந்து பந்துவீசிய விதம் ஒரு சிறந்த comeback ஆக இருந்தது. அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பேட்டிங்கில், ரஹ்மத் முதல் இன்னிங்ஸிலும், செதிக் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினார்கள்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அவர் ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் மிகவும் துல்லியமாகப் பந்துவீசியதால், நாங்கள் அவருக்கு எதிராகத் திணறினோம். ஆடுகளத்தின் தன்மையும் ஒவ்வொரு செஷனுக்கும் மாறிக் கொண்டிருந்தது. ஸ்கோர்போர்டு அழுத்தமும், ஆடுகளத்தின் தன்மையும் மாறிக்கொண்டே இருந்ததால், அவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது எங்களுக்குக் கடினமாக இருந்தது' என்றும் அவர் தெரிவித்தார்.