MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு

கல்வி & வேலைவாய்ப்பு

பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு

Admin
Last updated: மே 9, 2026 5:04 மணி
Admin
Share
SHARE

மதுரை: பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்களுக்கு இந்தமுறை முதுநிலை ஆசிரியர்களுக்குப் பதிலாக பட்டதாரி ஆசிரியர்களை உதவியாளராக அமர்த்தி தேர்வை எழுத வைத்ததால் பெருமளவு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு பொதுத்தேர்வுகளில் பார்வைத்திறன் குறைபாடு, சிந்தனைக் குறைபாடு மற்றும் விபத்து காரணமாக கை பாதித்து எழுத முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆசிரியர் களே ஸ்கிரைப் உதவியாளர் களாக இருந்து தேர்வை எழுதுகிறார்கள்.

ஸ்கிரைப் ஆசிரியர்கள், மாணவர்கள் சொல்வதை மட்டுமே தேர்வில் எழுத வேண்டும். மாற்றுத் திறனாளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்கள் எழுதும் பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களே கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

குறைந்தபட்சம் மாணவர் எழுதும் பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், மற்ற பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களையாவது நியமிப் பார்கள். பெரும்பாலும் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், முறையாக படித்துவிட்டும், கேள்விகளைப் புரிந்து விடை களைச் சொல்லும் சிந்தனைக் குறைபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அதனால் மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் தெரியாவிட்டாலும், அவர்கள் சரியாகப் படிக்காமல் வந்தாலும், ஆசிரியர்களே அதனைச் சமாளித்து தேர்வு எழுதி அந்த மாணவர்களை வெற்றிபெற வைத்துவிடுவர்.

ஆனால், நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், ஸ்கிரைப் மாணவர்களுக்கு அவர்கள் பாடப்பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக போடாமல், பத்தாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக நியமித்தனர்.

அவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு பாடத்துக்கான கேள்விகளுக்கு விடைகள் முழுமையாக தெரியாது. அந்தப் பாடத்திட்டத்துக்கான முழுமை யான புரிதலும் இருக்காது. மாற்றுத் திறனாளிகள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே ஸ்கிரைப் ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதுவார்கள்.

அவர்களே சிந்தித்து விடைகளை எழுத மாட்டார்கள். பல மாணவர் கள் வழக்கம்போல் படிக்காமல், தேர்வுக்குத் தயாராகாமல் வந்ததால் அவர்கள் இந்த முறை தேர்வை சரியாக எழுதவில்லை.

அதனால், நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் ஸ்கிரைப் ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏராளமானோர் தோல்வியடைந்துள்ளனர் மாநகராட்சிப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தோல்வி அடைந்ததால் அப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கியக் காரண மாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகை யில், ‘‘உதாரணமாக பொரு ளியல் பாடத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக அனுப்பி யதால் அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

மாற்றுத் திறனாளி மாணவர்களும் சரியாக படிக்காமலும், படித் ததைச் சொல்லத் தெரியாமலும் இருப்பார்கள். இதற்கு முன்பு பொருளியல் பாடப்பிரிவு ஸ்கிரைப் ஆசிரியர்களே ஸ்கிரைப்பராகச் சென்றதால் மாணவர்களுக்கு மிகவும் துணையாக இருந்து பதில் தேர்வு எழுதி அவர்களைத் தேர்ச்சிபெற வைப்பார்கள்.

சில நேரங்களில் வழக்கமான மாணவர்களைவிட இந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று விடுவார்கள். இந்த முறை பொருளியல் பாடப்பிரிவில் அதிகமான ஸ்கிரைப் மாணவர்கள் தோல்விக்கு, ஸ்கிரைபராக தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரி யர்கள் சென்றதே காரணம்’’ என்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?
Next Article IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

கல்வி & வேலைவாய்ப்பு

5 ஆண்டு சட்டப்படிப்பு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் விண்ணப்பம்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 18 முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் நடைபெறும்.

1 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

பொறியியல் கலந்தாய்வு: 1.30 லட்சத்தை தாண்டிய விண்ணப்பங்கள்!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

1 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம் வாங்க! நுழைவுத்தேர்வு விவரம்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறீர்களா? NCHMCT நடத்தும் நுழைவுத்தேர்வு, பாடப்பிரிவுகள், கல்வித் தகுதி, தேர்வு முறை மற்றும் இட ஒதுக்கீடு குறித்த முழு விவரங்களை இங்கே…

2 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று (மே 8, 2026) வெளியான 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம் 98.87%…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?