MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியா

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 10:10 காலை
Fernandez
Share
கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தி
கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
SHARE

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் சுகதன் சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மக்களாணைக்கு மதிப்பளிக்கும் செயல் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றது. புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது, பாஜகவைச் சேர்ந்த 20 கவுன்சிலர்கள் உள்ளூர் தெய்வங்களின் பெயரில் உறுதிமொழி ஏற்றனர். இது சட்டப்படி செல்லாது என்றும், அவர்கள் அனைவரும் புதிதாக பதவி ஏற்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 19 கவுன்சிலர்கள் சட்டப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், 35-வது வார்டு பாஜக கவுன்சிலரான சுகதன் மட்டும் பதவியேற்கவில்லை. உள்ளூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். கேரள சமூக விரோத தடுப்புச் சட்டத்தின் (கேஏஏபிஏ) கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, திருவனந்தபுரம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், பாஜக கவுன்சிலர் சுகதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸும் வலியுறுத்தின. கேரள நகராட்சி சட்டப்படி, தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்காத கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற அடிப்படையில் இந்த வலியுறுத்தல் எழுந்தது. இதனால் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக பதவியேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று சுகதன் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி குன்னி கிருஷ்ணன் விசாரித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குன்னி கிருஷ்ணன், 'பொதுமக்கள் வாக்களித்து சுகதனை தேர்வு செய்துள்ளனர். மக்களின் தீர்ப்பை நிராகரிக்க முடியாது. திருச்சூரில் உள்ள வையூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகதன், சிறையிலேயே கவுன்சிலராக பதவியேற்கலாம்' என்று உத்தரவிட்டார்.

மேலும், 'ஜூலை 14-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு சிறையில் பதவியேற்பு விழாவை நடத்த சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்' என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு, மக்களாணையை மதிக்கும் ஒரு முக்கிய தீர்ப்பாகக் கருதப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJP CouncillorKerala High CourtLocal Body ElectionSugathanThiruvananthapuram Corporationஉள்ளாட்சித் தேர்தல்கேரள உயர் நீதிமன்றம்சுகதன்திருவனந்தபுரம் மாநகராட்சிபாஜக கவுன்சிலர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ரயில் பெட்டியில் பெட்ஷீட் மற்றும் துண்டுகள் ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!
Next Article இந்திய ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி ஒருநாள் கிரிக்கெட்டை மீட்க சுப்மன் கில் யோசனை: 40 ஓவர் குறைப்புக்கு எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் சென்னை விமான நிலையத்தில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

You Might Also Like

இந்தியா

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்

1 Min Read
இந்தியா

கேரளாவின் உயரமான யானை ‘ராமனை’ அரசே பராமரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

கேரளாவின் சாவக்காடு பகுதியில் உள்ள மிக உயரமான யானை 'ராமனை' இனிமேல் கேரள அரசே பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில்…

1 Min Read
இந்தியா

ரூ.182 கோடி ஜிகாதி போதைப்பொருள் சிக்கியது: அமித் ஷா தகவல்

இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான 'ஜிகாதி போதைப்பொருள்' கேப்டகன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

இந்திய இளைஞர்களை கடத்திய முன்னாள் கப்பல் அதிகாரி ஆக்ராவில் கைது!

அதிக சம்பள வேலை என இளைஞர்களை ஏமாற்றி, கம்போடியா, தாய்லாந்துக்குக் கடத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய முன்னாள் கப்பல் அதிகாரி நாகேஷ் குமார் ஆக்ராவில் கைது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?