MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் ரூ.2,280 குறைந்தது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - பிசின்ஸ் - தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் ரூ.2,280 குறைந்தது!

பிசின்ஸ்

தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் ரூ.2,280 குறைந்தது!

Admin
Last updated: மே 15, 2026 4:23 மணி
Admin
Share
SHARE

சென்னையில் இன்று (மே 15) தங்கத்தின் விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,480 சரிந்தது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு மொத்தம் ரூ.2,280 குறைந்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தங்கத் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி மே 12-ம் தேதி 6% லிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 13-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்தது. பின்னர் விலை சற்று குறைந்தாலும், நேற்று (மே 14) மீண்டும் உயர்ந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் மேலும் விலை சரிந்து, ஒரு கிராம் ரூ.14,765-க்கும், பவுனுக்கு ரூ.1,18,120-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையும் காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000-க்கும் விற்பனையானது. மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு, ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்வதேச பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி (ரூ.96) போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai GoldGold Rate Todayஆபரணத் தங்கம்தங்கம் சரிவுதங்கம் விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோடை விடுமுறை: கோவை-ஊட்டிக்கு 25 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Next Article கடலூரில் இடி மின்னல் தாக்குதல்: கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

மாருதி மைக்ரோ எஸ்யூவி: டாடா பஞ்ச்-க்கு கடும் போட்டி!

புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலை களமிறக்க மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த புதிய மாடல், டாடா பஞ்ச் எஸ்யூவிக்கு கடும் போட்டியை கொடுக்கும்…

1 Min Read

எம்ஜி மெஜஸ்டர் டீசல்: கம்பீரமான எஸ்யூவி – எங்கள் அதிரடி ரிவ்யூவ்!

எம்ஜி மெஜஸ்டர் டீசல் எஸ்யூவி-யின் கம்பீரமான தோற்றம், விசாலமான கேபின், மற்றும் சிறந்த பயண சௌகரியம் பற்றிய MDTV 24x7-ன் விரிவான ஆய்வு.

2 Min Read
ஆட்டோமொபைல்

ரூ.9000 பட்ஜெட்டில் மாருதி ஸ்விஃப்ட் CNG: அசத்தும் மைலேஜ், பாதுகாப்பு!

மாருதி ஸ்விஃப்ட் CNG கார் மாடலை வெறும் 9 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் சொந்தமாக்கலாம். 33 கிமீ மைலேஜ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை அதிரடி சரிவு: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை கடந்த 11 நாட்களில் ரூ.8,000 குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.108,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நகை பிரியர்களுக்கு இது ஒரு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?