MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கஜானா காலியாகிவிட்டதா? 234 எம்.எல்.ஏக்களுக்கும் கார் எப்படி?- எழிலன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கஜானா காலியாகிவிட்டதா? 234 எம்.எல்.ஏக்களுக்கும் கார் எப்படி?- எழிலன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கஜானா காலியாகிவிட்டதா? 234 எம்.எல்.ஏக்களுக்கும் கார் எப்படி?- எழிலன் கேள்வி

தமிழ்நாடு

கஜானா காலியாகிவிட்டதா? 234 எம்.எல்.ஏக்களுக்கும் கார் எப்படி?- எழிலன் கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 19, 2026 9:41 மணி
Fernandez
Share
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மருத்துவர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மருத்துவர் எழிலன் நாகநாதன்
SHARE

முன்னாள் முதலமைச்சர் விஜயின் அறிவிப்பு குறித்து தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். 'கஜானா காலியாகிவிட்டது' என்று கூறிக்கொண்டே, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார்கள் எப்படி வழங்க முடியும்? என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் எழிலன் நாகநாதன், 'முந்தைய ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அதே சமயம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் புதிய கார்களை வழங்க வேண்டும். ஏற்கனவே தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாகத் தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார் வழங்க வேண்டிய அவசியமில்லை' என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், இலவச மின்சாரம் குறித்த அரசின் அறிவிப்பையும் அவர் விமர்சித்தார். '500 யூனிட்டுகளுக்குள் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று த.வெ.க அரசு கூறுகிறது. ஆனால், 501 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், ஒரு யூனிட்டிற்கு ரூ.4 என கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதுபோன்று திட்டங்களை அறிவிப்பது போல் அறிவித்துவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டும் செயல் இது' என்று அவர் குற்றம் சாட்டினார்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்துப் பேசிய அவர், 'முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலில் தொடங்கினார். 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டுள்ள மூன்று அறிவிப்புகளும் வெறும் கவர்ச்சிக்கான அறிவிப்புகள் என்றும், அவை விளம்பரத்திற்காகவும், செய்திகளில் இடம்பெறுவதற்காகவும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 'இந்தத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பட்ஜெட்டில் மருத்துவக் காப்பீட்டிற்காக ரூ.1,400 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது, காப்பீட்டு நிறுவனத்திற்கு நாம் கூடுதலாக ரூ.4,000 கோடி வழங்க வேண்டியிருக்கும். இது எப்படி சாத்தியமாகும்?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மருத்துவக் காப்பீட்டு நிதி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் எழிலன் நாகநாதன் கேட்டுக்கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CM VijayDMKEzhilanFree ElectricityMedical InsuranceMLATamil Naduஇலவச மின்சாரம்எழிலன்சட்டமன்ற உறுப்பினர்தமிழ்நாடுதிமுகமருத்துவ காப்பீடுமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் 8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி
Next Article சீனாவின் கியான்டாங் ஆற்றில் தலைகீழாகப் பாயும் கடல் அலைகள் சீனாவில் அதிசயம்: ஆற்றுக்குள் தலைகீழாகப் பாயும் கடல் அலைகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தமிழ்நாடு

செங்கல்பட்டு: ஆகஸ்ட் 14 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணி…

1 Min Read
மாநிலங்களவை விவாதம்
தமிழ்நாடு

மாணவர்கள் மீது பெல்லட் தாக்குதல்: மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமுல் வலியுறுத்தல்

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஒரு மாணவர் கண் பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சகாரிகா…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மூடிய 717 டாஸ்மாக் கடைகள்: தமிழக அரசு வெளியிட்ட விவரங்கள்

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி, முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவு: குஷ்புவின் இன்ஸ்டா பதிவு சர்ச்சை

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு மத்தியில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?