MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலன் அந்தரங்க புகைப்படம் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலன் அந்தரங்க புகைப்படம் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காதலன் அந்தரங்க புகைப்படம் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை

தமிழ்நாடு

காதலன் அந்தரங்க புகைப்படம் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை

Fernandez
Last updated: செப்டம்பர் 3, 2026 8:11 காலை
Fernandez
Share
தற்கொலை செய்து கொண்ட சரிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது
தற்கொலை செய்து கொண்ட சரிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது
SHARE

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மூப்பன்வலசை கிராமத்தில் வசிக்கும் சரிதா (22) என்ற இளம்பெண், தனது முன்னாள் காதலன் லோகேஷ், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரிதாவும், பிரம்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், லோகேஷின் நடத்தையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சரிதா அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதற்கிடையில், சரிதாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு வரனுடன் திருமண நிச்சய ஏற்பாடுகளைச் செய்தனர். வரும் 30 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவிருந்தது.

திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சரிதாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதை அறிந்த லோகேஷ், பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார். சரிதாவுடன் அவர் முன்பு எடுத்த நெருக்கமான புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சரிதாவின் வீட்டாரும், மணமகன் வீட்டாரும் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், திருமணத்தை உடனடியாக நிறுத்தினர். உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நின்றதால், சரிதா மிகுந்த அவமானத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.

மனமுடைந்த சரிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால், சரிதாவின் தற்கொலைக்கு காரணமான லோகேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை வாங்க மறுத்து அவர்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தற்போது தலைமறைவாக உள்ள லோகேஷை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKVarunஅந்தரங்க புகைப்படம்சரிதாதற்கொலைராமநாதபுரம்லோகேஷ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அடையாறு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடம் அடையாறு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று!
Next Article நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய நாமக்கல் இளைஞர் அசோக் சரவணன் நிலவில் 1 ஏக்கர் நிலம்: நாமக்கல் இளைஞரின் புதுமையான பரிசு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

கும்பகோணம் தீ விபத்து: 22-ஆம் ஆண்டு நினைவு தினம் – 94 மோட்ச தீபங்கள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, 94 மோட்ச தீபங்கள் ஏற்றப்பட உள்ளன. பெற்றோர்கள்…

2 Min Read

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவல் இல்லை – சுகாதாரத்துறை

தமிழகத்தில் அதிவீரிய கொரோனா தொற்று பரவுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வழக்கமான கண்காணிப்பில் மட்டுமே தொற்று…

3 Min Read
டாஸ்மாக் மதுபான கடையில் மதுபான பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு

டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை அக்டோபர் முதல் வாரத்தில் 10 ரூபாய் உயரக்கூடும். காலி பாட்டில்கள் மறுசுழற்சிக்கு சமூக நல வரி விதிக்கப்படுகிறது.

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர் தற்கொலை குறித்து வருத்தம் தெரிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தற்கொலை: உதயநிதி ஸ்டாலின் வேதனை

நீட் தேர்வு அச்சத்தால் பல்லாவரம் மாணவர் சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?