MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவல் இல்லை – சுகாதாரத்துறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவல் இல்லை – சுகாதாரத்துறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவல் இல்லை – சுகாதாரத்துறை

தமிழ்நாடு

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவல் இல்லை – சுகாதாரத்துறை

Fernandez
Last updated: ஜூலை 13, 2026 7:54 மணி
Fernandez
Share
SHARE

தமிழகத்தில் தற்போது அதிவீரிய கொரோனா தொற்று பரவுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயால் இருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு COVID-19 மற்றும் Klebsiella pneumoniae பாக்டீரியா தொற்று இருந்ததோடு, நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன. கடுமையான Klebsiella pneumoniae தொற்று மற்றும் தீவிர சுவாசக் கோளாறு (ARDS) காரணமாக அவர் உயிரிழந்தார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மற்றொரு 68 வயது நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக அவரது இறப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் COVID-19 ஒரு தற்செயலான கண்டறிதலாகவே இருந்தது.

மேலும், ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் கடப்பா மருத்துவமனையில் COVID-19 பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கின் மருத்துவ விவரங்கள் ஆந்திரப் பிரதேச சுகாதாரத் துறையால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (Integrated Disease Surveillance Programme IDSP) கீழ், COVID-19 நோய்க்கான கண்காணிப்பு வழக்கமான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கமாக அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவும், தீவிர சுவாச நோய்கள் சிகிச்சைக்கு பலனளிக்காத நோயாளிகளுக்கும், ஏனைய நோயாளிகளுக்கும் கோவிட் தொற்று பரிசோதனை செய்வது நடைமுறையில் உள்ளது.

அதன் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் 990 பேருக்கும், 2025 ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2026 ஆம் ஆண்டில் 335 பேருக்கும் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 2,575 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் வழக்கமான நோய் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை மட்டுமே; நோய்த் தொற்று பரவல் (Outbreak) காரணமாக ஏற்பட்டவை அல்ல. பதிவான பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன. நோயின் தீவிரம் அதிகரித்ததற்கான அல்லது வழக்கத்திற்கு மாறான மருத்துவ வெளிப்பாடுகளுக்கான எந்த ஆதாரமும் இல்லை.

இந்நிலையில், தேசிய வைராலஜி நிறுவனம் (NIV), புனே-யில் மேற்கொள்ளப்பட்ட Whole Genome Sequencing (WGS) பரிசோதனைகளின் முடிவுகளின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் வகை லேசான நோய் வெளிப்பாட்டைக் கொண்டதாகவும், சமூகத்தில் குறைந்த அளவிலான (Low Community Transmission) பரவல் மட்டுமே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிகள், நீண்டகால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் இருமல்/தும்மல் ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் போன்ற பொது சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் அதிக வீரியம் கொண்ட COVID-19 வைரஸ் வகை பரவி வருவதாக எந்த ஆதாரமும் இல்லை. கடந்த ஆண்டுகளை விட தற்போது கோவிட் தொற்று குறைவாகவே உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CoronaCOVID-19Health DepartmentTamil Naduகொரோனாகோவிட்-19சுகாதாரத்துறைதமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முதலமைச்சர் விஜய் புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்: 73,000 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கல்
Next Article சுத்தமான சமையலறை தினமும் 10 நிமிடம்: சமையலறை சுத்தம், நாள் முழுக்க புத்துணர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்

மாணவர் சேர்க்கை: ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், மாணவர் சேர்க்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை…

ஜூலை 14, 2026

ரயில் பெட்டியில் பூஜை: ரெயில்வே விளக்கம்

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்ட சொகுசு ரயில்…

ஜூலை 13, 2026

ரயில்களில் முதலிரவு அலங்காரம் முதல் பூஜை வரை: சர்ச்சையில் ரயில்வே நிர்வாகம்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலிரவு அலங்காரம், பின்னர்…

ஜூலை 13, 2026

புதிய வாக்காளர்கள் பெற்றோரின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும்…

ஜூலை 13, 2026

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்

உலகளாவிய சுகாதார சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குமரியில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த நீர், சேதம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 100 வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
இந்தியா

23 மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டம் நிறைவு

இந்தியாவில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்கும் முக்கிய…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலை ஒளிபரப்பு: சபாநாயகர் பேட்டி

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்விக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டியளித்துள்ளார். இது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

1 Min Read
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் காட்சி
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி: குப்பை தரம் பிரிப்புக்கு முக்கிய வேண்டுகோள்

சென்னை மாநகராட்சி, திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து ஒப்படைக்குமாறு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. விதிகள், வகைகள், முக்கியத்துவம் குறித்து விரிவான…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?