MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கக்கூடாது: பழனிசாமி ஆதரவாளர்கள் மனு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கக்கூடாது: பழனிசாமி ஆதரவாளர்கள் மனு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கக்கூடாது: பழனிசாமி ஆதரவாளர்கள் மனு

அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கக்கூடாது: பழனிசாமி ஆதரவாளர்கள் மனு

Admin
Last updated: மே 27, 2026 6:43 காலை
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரிடம் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஆதரவாளர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், இன்பதுரை எம்பி உள்ளிட்டோர், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று மனு அளித்தனர். இதுகுறித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதை மீறி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 25 உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிசாமி ஏற்கனவே கடிதம் அளித்திருந்தார்.

அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கும் நிலையில், கட்சி தாவல் தடைச் சட்ட நடவடிக்கை பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். ஏற்கெனவே கட்சி தாவல் தடைச் சட்ட நடவடிக்கைக்கான கடிதம் ஆய்வில் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கும் சட்டத்திற்கும் முரணானது என்றும், எனவே அவர்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் விஜய் குதிரை வேகத்தில் செயல்படுவதாகக் கூறிய நிலையில், காலையில் ராஜினாமா செய்தவர்களுக்கு 5 நிமிடங்களில் உறுப்பினர் அட்டை வழங்கப்படுவதாகவும், இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா எனத் தெரியவில்லை என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்தார். தூய்மையான ஆட்சியை தருவதாகக் கூறிய முதல்வர், முறைகேடாக பின்வாசல் வழியாக ஆட்சியை நிலைநிறுத்த குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ராஜினாமா செய்த ஐந்து எம்எல்ஏக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளதாகவும், பழனிசாமி தலைமையேற்பதாகவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu PoliticsTTV Dhinakaranஅரசியல்சட்டப்பேரவை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரெஞ்சு ஓபன்: மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
Next Article உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க எளிய தக்காளி ஜூஸ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அதிமுக MLA பெயர் விடுபட்டது: அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று வருத்தம்

பழனி தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக MLA ரவிமனோகரன் பெயர் விடுபட்டதால், அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

1 Min Read
குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள்
தமிழ்நாடு

குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது

குதிரை பேர வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். வினோத் வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
அரசியல்

கரூர்: விவசாயி மீது நாட்டு துப்பாக்கிச் சூடு – பரபரப்பு

கரூர் மாவட்டம் கடவூர் அருகே விவசாயி கருணைகிரி (48) மீது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயமடைந்துள்ளார். மர்ம நபர் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
அரசியல்

ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை

சென்னை: ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 3 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?