MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார்: இபிஎஸ் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார்: இபிஎஸ் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார்: இபிஎஸ் விமர்சனம்

தமிழ்நாடு

விஜய் நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார்: இபிஎஸ் விமர்சனம்

Fernandez
Last updated: ஜூலை 15, 2026 1:03 மணி
Fernandez
Share
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.
SHARE

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 60 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த ஆட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் எந்தவொரு உருப்படியான சாதனையும் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (EPS) குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சைக் குறிப்பிட்டு பேசிய இபிஎஸ், விஜய் இன்னும் முதலமைச்சர் தகுதிக்கு வரவில்லை என்றும், ஒரு நாலாந்தர பேச்சாளர் போல சினிமா பாணியில் 'பஞ்ச் டயலாக்' பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் விஜய் அண்மையில் பெண்களின் பாதுகாப்புக்காக ரூ. 354 கோடி மதிப்பீட்டில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதை ஒரு வெற்று விளம்பர அரசியல் 'ஷோ' என எடப்பாடி பழனிசாமி வர்ணித்தார். 'இரவு நேரத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தங்களுக்கு தூய ஆட்சி, வெளிப்படையான ஆட்சி என்று மேடைகளில் தம்பட்டம் அடிக்கும் தவெக அரசு, கடந்த காலங்களில் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையே தற்போது தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு பதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் அம்பலப்படுத்தினார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு நிஜமான பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை இபிஎஸ் நினைவுகூர்ந்தார். ஜெயலலிதாவின் 'அம்மா அரசு' இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட 'காவலன் செயலி' என்ற மொபைல் ஆப் மூலம் பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, போலீஸார் விரைந்து வந்து காப்பாற்றும் நடைமுறை இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், தற்போது விளம்பரத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த 'சிங்கப்பெண்' படையால் மக்களுக்கு உண்மையில் ஏதேனும் நன்மை கிடைக்கிறதா என்பது காலப்போக்கில் தான் தெரியும் என்றும், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்றும் விமர்சித்தார்.

செய்தியாளர்கள் எழுப்பிய, 'உங்களது சட்டமன்ற உறுப்பினர்களை உங்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையா?' என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி காரசாரமாகப் பதிலளித்தார். ஒரு கட்சியில் வெற்றி பெற்ற பிறகு, மாற்று முகாமிற்குத் தாவுவது என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத ஒரு தவறான முன்னுதாரணம் என்றும், இதுதான் தற்போதைய தவெக ஆட்சியில் முதன்முறையாக அரங்கேறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழலில் பல மறைமுகப் பின்னணிகள் உள்ளதால், சில ரகசியங்களை இப்போதே வெளிப்படையாகப் பேச முடியாது என்றும், அதனைத் தகுந்த நேரத்தில் பிறகு அறிவிப்பேன் என்றும் கூறி டெல்லி மற்றும் உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் இபிஎஸ் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKEPSஎடப்பாடி பழனிசாமிகாவலன் செயலிசிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைதமிழக அரசியல்தவெக அரசுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நெதர்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் நெதர்லாந்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிப்பு
Next Article கேரியர் கைடன்ஸ் நிபுணர் தினேஷ் பிரபு பொறியியல் கவுன்சிலிங்: சாய்ஸ் ஃபில்லிங்கிற்கு பின் என்ன? முக்கிய ஆவணங்கள் தேவை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்

18 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு – மத்திய அரசு மவுனம்?

லடாக் தன்னாட்சி உரிமைக்காகப் போராடும் சோனம் வாங்சுக் 18 நாள் உண்ணாவிரதத்தால் உடல்நலம்…

ஜூலை 15, 2026

கணவனைக் கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மனைவி: காதலனுடன் கைது

நவி மும்பையில், கணவரை கொலை செய்து உடலை…

ஜூலை 15, 2026

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: உறவில் முக்கிய தருணம் – மோடி

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில்…

ஜூலை 15, 2026

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட்…

ஜூலை 15, 2026

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு: கர்நாடகாவில் 14 வயது சிறுமிகளுக்கு இலவச தடுப்பூசி

கர்நாடகாவில் 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய்…

ஜூலை 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புளி சேகரிக்க சென்ற தொழிலாளி வெள்ளியங்கிரி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

21 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்…

1 Min Read
அங்கன்வாடி மையத்தில் முறைகேடு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பும் காட்சி
தமிழ்நாடு

25 பேருக்கு போலி அட்டெண்டன்ஸ்: சிக்கிய அங்கன்வாடி அதிகாரி!

ஹவுசிங் போர்டு அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகளுக்குப் போலி அட்டெண்டன்ஸ் போடப்பட்ட விவகாரம் அம்பலம். அதிகாரியின் அலட்சியப் பேச்சு மற்றும் மிரட்டல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min Read
மதுரை உயர் நீதிமன்றத்தில் பைக் டாக்ஸி அனுமதி கோரும் வழக்கு விசாரணை
தமிழ்நாடு

பைக் டாக்ஸிக்கு அனுமதி: தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கேள்வி

பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக அரசின் தயக்கம் குறித்து மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?