MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்

Admin
Last updated: ஜூன் 29, 2026 6:34 காலை
Admin
Share
SHARE

தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சென்னை வானகரத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் இணைப்பு விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக உறுதிமொழி ஏற்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'ஆறு முறை ஆட்சி புரிந்த, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞர் 50 ஆண்டுகள் தாங்கி பிடித்த இயக்கத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலில் உதயசூரியன் சின்னத்தில்தான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய பிறகும், சட்டமன்றத்தில் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு பேசிய உறுப்பினரை கண்டித்து, 'எனக்கு தலைவர் கலைஞர்' என்று எம்ஜிஆர் கூறியது வரலாறு. நான் சாதாரண இளைஞனாக இருந்தபோது, நாடகம் பார்க்க வந்த எம்ஜிஆர் தரையில் அமர்ந்து பார்த்தார். இன்று அதே இயக்கத்தில் தலைமை தொண்டனாக உங்களை வரவேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், உண்மையாக உழைத்தவர் என்றும், சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் பேசக்கூடியவர் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 'எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் நீங்கள் பதவிக்காக, பவுசுக்காக இல்லாமல் கொள்கைக்காக இணைந்துள்ளீர்கள். திமுக வலுவாக இருந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்தது. தினமும் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உலக அளவில் பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன. வேலைவாய்ப்புகள் பெருகின. ஆனால், தற்போது ஆட்சி மாற்றத்தால் தமிழ்நாடு அகல பாதாளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம், கொள்ளை, பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமைச்சர்களே சம்பந்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் என மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்குகின்றன. உலகின் பல நாடுகள், தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளன. லண்டன் மாநகரிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. 'தமிழ்நாடு' என பேரறிஞர் அண்ணா வைத்த பெயர் உள்ளவரை அவரது பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதுபோல் திமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளவரை மு.க.ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; மூன்று மாதங்களில் கூட வரலாம், ஆறு மாதங்களுக்குப் பிறகும் வரலாம். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும். தவெக 108 இடங்களில்தான் வென்றன. திமுக வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில்தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும். இந்த நிமிடத்திலிருந்து திமுகவின் வெற்றிக்காக உழைக்க தயாராக இருங்கள். உங்களுக்கான அடையாளம் உங்களைத் தேடி வரும்' என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளி வீர வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKதமிழக அரசியல்தேர்தல்மு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
Next Article தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: புதிய நியமனங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குற்றப்பிரிவு சிஐடி டிஐஜி வருண் குமார் ஈரோடு அதிரடிப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மர வியாபாரியிடம் ரூ.5 லட்சம் மோசடி

மர வியாபாரியிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வற்புறுத்திய…

1 Min Read
விடுமுறை தினத்தில் கன்னியாகுமரியில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்
தமிழ்நாடு

விடுமுறை தினத்தில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக மாறிய கன்னியாகுமரி

விடுமுறை தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

1 Min Read
சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 23.07.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பாதிக்கும்…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?