MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

இந்தியா

பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Admin
Last updated: மே 28, 2026 9:42 காலை
Admin
Share
SHARE

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் சமீபத்தில் ஆட்சியை இழந்தார். தற்போது அவர் கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

பினராயி விஜயனின் மகள் மற்றும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப ஆலோசகருமான டி. வீணா, எக்ஸாலாஜிக் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது செயல்பாட்டில் இல்லாத அந்த நிறுவனம், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் எந்தவித சேவையும் வழங்காமலேயே சிஎம்ஆர்எல் என்ற கனிம நிறுவனத்திடமிருந்து ரூ.1.72 கோடி பெற்றதாக புகார் எழுந்தது. இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் வசிக்கும் வீடு, கண்ணூரில் உள்ள சொந்த வீடு, கோழிக்கோட்டில் உள்ள அவரது மருமகன் மற்றும் முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் வீடு உட்பட மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி சிஎம்ஆர்எல் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் கடந்த 23 ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுகின்றன. கேரள தேர்தல் பிரச்சாரத்தின்போது பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ஆனால் தற்போது அதே மத்திய முகமை அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுவதன் மூலம் காங்கிரஸ் பயனடைகிறது. எக்ஸாலாஜிக் நிறுவனத்துடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட நிறுவனம், தற்போதைய 2 அமைச்சர்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு நேரடி பணம் வழங்கியுள்ளது. அந்த பணப்பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை' என்றார். மேலும், இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில பாஜக துணைத் தலைவர் ஷான் ஜார்ஜ் கூறுகையில், 'எஸ்.எஃப்.ஐ.ஓ (கடும் முறைகேடு புலனாய்வு அலுவலகம்) மேற்கொண்ட விசாரணையில் வீணா விஜயன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடையவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கு இறுதியில் பினராயி விஜயனை சென்றடையும். விஜயனும் அவரது மகளும் கைது மற்றும் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். விஜயன் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் பணம் பெற்றுள்ளனர். இதில் தொடர்புடையவர்களின் பெயர்கள் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் நடக்கின்றன' என்றார்.

திருவனந்தபுரத்தில் நேற்று காலை சோதனை தொடங்கியதில் இருந்து பினராயி விஜயனும் அவரது குடும்பத்தினரும் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். அதேநேரம் நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வெளியே திரண்டு அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சென்ற ஒரு வாகனத்தை தொண்டர்கள் வழிமறித்து அமலாக்கத்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் முகப்பு கண்ணாடி சேதமடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மீது பிளாஸ்டிக் பாட்டில்கள், ஹெல்மெட்டுகள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. உடனடியாக கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு, தொண்டர்களை அமைதிப்படுத்தி, வன்முறையை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் திருவனந்தபுரத்தில் காலையிலிருந்து போராட்டங்களும் அதற்கு எதிராக போலீஸ் நடவடிக்கைகளும் பல மணி நேரம் நீடித்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மாநில போலீசார் கடுமையாகப் போராடினர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ED RaidPinarayi Vijayanஅமலாக்கத்துறைகேரள அரசியல்பினராயி விஜயன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை
Next Article சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார் கோவை மூத்த வழக்கறிஞர் மோகனா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
இந்தியா

ஹல்த்வானி சம்பவம்: நடவடிக்கை எடுக்க கோரி கார்கே கடிதம்

ஹல்த்வானியில் நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். 24 நாட்கள் ஆகியும் நடவடிக்கை…

2 Min Read
பாஜக தேர்தல் செலவு அறிக்கை
இந்தியா

5 மாநில தேர்தல்: பாஜக செலவு ரூ.529 கோடி – பெங்களுருவில் 54% செலவு

5 மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக ரூ.529 கோடி செலவிட்டுள்ளது. இதில் 54% மேற்கு வங்காளத்தில் செலவிடப்பட்டுள்ளது. பாஜகவிடம் ரூ.7,689.06 கோடி வங்கி இருப்பு உள்ளது.

2 Min Read
இந்தியா

சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்றும், குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என்றும் உச்ச…

2 Min Read
மத்திய அமைச்சரவை கூட்டம்
இந்தியா

தேர்வு முறைகேடு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – புதிய மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?