MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: செங்கோட்டை குண்டுவெடிப்பு: AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - செங்கோட்டை குண்டுவெடிப்பு: AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியா

செங்கோட்டை குண்டுவெடிப்பு: AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்

Admin
Last updated: மே 25, 2026 11:13 காலை
Admin
Share
SHARE

டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக NIA, 7,500 பக்க குற்றப்பத்திரிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

விசாரணையில், உயிரிழந்த மருத்துவர் உமர் முகமதுவுக்கு, ஜசிர் பிலால் வானி என்ற நபர் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் உதவி செய்துள்ளார். இவர், 'அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்' என்ற அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார். மேலும், இவர் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் தங்கி வெடிகுண்டுகள் தயாரிக்கும் நுட்பங்களை வழங்கியுள்ளார்.

மருத்துவர் அடீல் அகமது, வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை ஜசிர் பிலால் வானிக்கு வாங்கி கொடுத்துள்ளார். மருத்துவர் உமர், ராக்கெட் குண்டுகள் குறித்து ஆய்வு செய்து, அதன் தயாரிப்பு வழிமுறைகளை வழங்கியுள்ளார். ஜசிர், ராக்கெட் குண்டுகள் தயாரிப்பது எப்படி, அதன் வெடிமருந்து கலவை விகிதம் என்ன என்பது போன்ற விவரங்களை யூடியூப் மற்றும் சாட்ஜிபிடி போன்ற AI தளங்கள் மூலம் தேடி சேகரித்துள்ளார்.

இந்த தீவிரவாத கும்பல், வெடிகுண்டுகள் தயாரிக்க AI தளங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இவர்கள் தயாரித்த ராக்கெட் குண்டுகள், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் வனப்பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவர்களது ஆயுதங்கள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் போல் மிக நுணுக்கமாக இருந்துள்ளன. விரிவான அறிவியல் மற்றும் தடயவியல் ஆய்வு மூலம் இந்த தீவிரவாதிகளின் பெரிய சதி வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக NIA தெரிவித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AINIAகுண்டுவெடிப்புசெங்கோட்டைடெல்லிதீவிரவாதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு: காரணம் என்ன?
Next Article தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தோரின் PF கணக்கில் ரூ.15,000!

முதல்முறையாக வேலைவாய்ப்பு பெற்று பிஎப் கணக்கில் இணைந்த 15 லட்சம் ஊழியர்களுக்கு தலா ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி இல்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க உள்ளதாக வெளியான ஊடக செய்தியை பிரதமர் மோடி மறுத்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது என்றும், இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்றும்…

1 Min Read
இந்தியா

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ராவத், பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். இது கட்சித் தலைமையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்

நீட் தேர்வு விண்ணப்பத் தொகையை திரும்பப் பெற, தேர்வர்கள் தங்கள் வங்கி விவரங்களை மே 27 ஆம் தேதி வரை புதிய இணையதளத்தில் பதிவேற்றலாம் என தேசிய…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?