தேங்காயின் புரதமும் செலினியமும் தடுக்கும் நோய்கள் என்ன?

தேங்காயில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

தேங்காயை உண்பதன் மூலம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக, சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் தேங்காயை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால், தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும் என நம்பப்படுகிறது. தேங்காய் உண்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

தினமும் சிறிதளவு தேங்காயை மென்று சாப்பிடுவது தோலின் பளபளப்பை அதிகரிக்கும். தேங்காயில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து, சருமத்தின் பொலிவை மேம்படுத்துகின்றன.

தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள், முடி உதிர்வு மற்றும் முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன. இளவயதில் முடி உதிர்வது மனச்சோர்வை ஏற்படுத்தும் நிலையில், இந்த சத்துக்கள் கூந்தலின் அழகைப் பாதுகாக்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.

மேலும், தேங்காயில் உள்ள நீர்ச்சத்து உடல் மற்றும் சருமத்தைப் பாதுகாக்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து, வறட்சியைப் போக்கி ஆரோக்கியத்தைக் காக்கிறது.

காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதன் வலிப்புத் தன்மையைக் குறைப்பதற்கு தேங்காய் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு தேங்காயில் சுமார் 61 சதவீதம் வரை நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து செரிமானத்திற்குத் தேவையான நொதிகளை அதிகரித்து, உணவுகள் எளிதில் செரிமானம் ஆக உதவுகிறது.

இளவயதில் முடி நரைப்பது, முடி உதிர்வது, அடர்த்தி குறைவது போன்ற பிரச்சனைகள் இன்றைய இளைஞர்களுக்கு பெரும் சவாலாக உள்ளன. இதனால் அவர்களின் மனநிலையும் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.

இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள, தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் கூந்தலின் அழகை அதிகரிக்கும் என சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version