முதல்வர் விஜய் இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரே சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமரச் சொல்லி அவருடன் உரையாடியபடி பயணித்தார். இதுகுறித்து பேருந்து நடத்துனர் கூறுகையில், 'பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நனவாகியுள்ளது' என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் அவருக்கு நன்றி சொன்னேன்' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். போக்குவரத்துத் துறையில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரே பேருந்தில் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் நடத்துனர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் டிக்கெட் எடுத்தனர்.
You Might Also Like
நாட்டாமை குடும்பம் என பச்சைக் குத்தினால் என்னை சந்திக்கலாம்: சரத்குமார்
நடிகர் சரத்குமார், 'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக்கொள்ளும் ரசிகர்களை எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்திக்கலாம் என அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2 Min Read
குற்றவாளிக்கு நெஞ்சுவலி: தவெக அரசின் ஊழலை அம்பலப்படுத்தியவர் மீது சந்தேகம் – நயினார் நாகேந்திரன்
தவெக அரசின் ஊழலை அம்பலப்படுத்திய குற்றவாளிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்விகளை எழுப்பியுள்ளார். முக்கிய சாட்சிகளாக கருதப்படும் இருவருக்கும்…
1 Min Read
மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: தமிழக அரசுக்கு அதிகரிக்கும் வருவாய்!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.
1 Min Read
திமுக சுயநல இயக்கம் – தவெக ஐடி விங் விமர்சனம்
திமுகவை சுயநல இயக்கம் என விமர்சித்த தவெக ஐடி விங், காவிரி விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்கள் நலன் சார்ந்து ஸ்டாலின் பேச வேண்டும் என…
2 Min Read
