MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு

உலகம்

சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு

Admin
Last updated: மே 24, 2026 8:05 காலை
Admin
Share
SHARE

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியின் போது நேற்று மாலை வரை 90 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசின் 'சீனா டெய்லி' செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் சிக்கியவர்களை முழுமையாக மீட்பதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குப் பிந்தைய பணிகளைச் சரியாகக் கையாள வேண்டும் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் இந்த விபத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணியிடப் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். மேலும், பெரிய விபத்துகளைத் தடுக்க, சாத்தியமான அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சீன சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 90 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியர்கள் சார்பாக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் சீன மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சீனாசீனா டெய்லிதொழிலாளர்கள்நிலக்கரி சுரங்கம்பிரதமர் மோடிவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு
Next Article 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் பிரதமர் மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

உலகம்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்பு நடவடிக்கை என விளக்கம்

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ட்ரோன்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட…

1 Min Read
இந்தியா

ராகுல் காந்திக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து: ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பிரார்த்தனை

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 56வது பிறந்தநாளையொட்டி அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ராகுல் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திப்பதாகக்…

1 Min Read
உலகம்

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 81வது ஆண்டு விழா வரும் மே 9 அன்று கொண்டபாடப்படுகிறது. இந்நிலையில் மே 8,9 ஆகிய இரு தினங்களுக்கு…

1 Min Read
உலகம்

டிரம்ப்பை சந்தித்த மோடி: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து, ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்தினார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?