MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவறாக சித்தரிக்கப்படுவதாக சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவறாக சித்தரிக்கப்படுவதாக சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவறாக சித்தரிக்கப்படுவதாக சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு

தமிழ்நாடு

தவறாக சித்தரிக்கப்படுவதாக சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு

Fernandez
Last updated: அக்டோபர் 22, 2026 12:43 மணி
Fernandez
Share
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
SHARE

சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, தவெக அரசு மாநகராட்சி பணிகளை ரத்து செய்து, நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மேயர் பிரியா, 'இன்றைக்கு ஆட்சியை அமைத்திருக்கும் தவெக அரசு, மே மாதம் முதலே மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்துச் செய்துள்ளது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் நிறைய இடங்களில் கண்டனங்களைப் பதிவுச் செய்திருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 'விர்ச்சுவல் வாரியஸ்' என்று அழைக்கப்படும் சிலர் சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரிப்பதாகவும், தான் தவெக அரசையும் அதன் நிர்வாகத்தின் சீர்கேட்டையும் கண்டித்துப் பேசும் மறுநாளே, தன்னைத் தவறாகச் சித்தரித்து ஏஐ (AI) மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பி, திமுகவினரையும் தவறாகச் சித்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அவதூறு வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவுவது தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதித்துள்ளதாக மேயர் பிரியா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இன்றைக்கும் தன்னைத் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

'இதற்கான நடவடிக்கையாவது தவெக அரசு எடுக்குமா? என்று கேட்டால் அது கேள்விக் குறியான விஷயம் தான். பெண்களுக்கான பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என்று பேசினார்கள். ஆனால், ஒரு மேயராக, பெண்ணாக இருக்கக்கூடிய நான் பலமுறை இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பேசியும் மௌனம் காக்கும் முதலமைச்சர் தான், இன்றைக்கு இருக்கக் கூடிய முதலமைச்சர். இதற்கான பதில் எப்போது வரும்? என்பதை கேள்வியாகவே வைக்கிறேன்' என முதலமைச்சரைக் கண்டித்தும் அவர் பேசியுள்ளார்.

சென்னையில் மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சகோதரி, மேடையில் பேசியதற்கு அவரை அதே இடத்தில் வைத்து திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டித்தார். அதே மேடையில், மாவட்ட திமுக செயலாளரான சேகர் பாபுவும் கண்டித்தார். இதேபோல், ஏதாவது ஒரு இடத்தில் தவெக நிர்வாகிகளையோ, தவெகவில் நடைபெறும் தவறுகளையோ, முதலமைச்சரோ, அமைச்சர்களோ கண்டித்ததாக ஏதாவது ஒரு தகவல் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

'விர்ச்சுவல் அபியூசர்ஸை வைத்துக் கொண்டு இன்றைக்கு ஆட்சியமைத்திருக்கக் கூடியவர்கள், பெண்களை இழிவாகப் பேசி, பெண்களை மிகவும் தவறாகச் சித்தரிக்கக் கூடிய அரசாக தவெக அரசு இருக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கான எனது பணியைத் தொடர்ந்துச் செய்வேன்' என மேயர் பிரியா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AI VideoAI வீடியோCorporation fund allocationPriya RajanSocial Media DefamationTNV GovernmentWomen Safetyசமூக வலைத்தள அவதூறுசென்னை மேயர் பிரியாதவெக அரசுபெண்கள் பாதுகாப்புமாநகராட்சி நிதி ஒதுக்கீடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னை ஐஐடி வளாகத்தில் துர்கா பூஜை விழா ஐஐடி சென்னையில் முதல் துர்கா பூஜை: இயக்குநர் பங்கேற்பு
Next Article உத்தர பிரதேசத்தில் அரசு மானியம் பெறுவதற்காக நடைபெற்ற போலி திருமணங்கள் தொடர்பான விசாரணை உத்தர பிரதேசத்தில் போலி திருமணங்கள்: மானியம் பெற நடந்த மோசடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோ பேசுகிறார்

இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி: அமெரிக்காவின் கருத்து

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தேசிய நலன் கருதியே விரிவுபடுத்தப்படுவதாக அமெரிக்க செனட்டர்…

அக்டோபர் 23, 2026

காசி தமிழ் சங்கமம்: நவம்பர் 28 முதல் இணையதள முன்பதிவு தொடக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த…

அக்டோபர் 23, 2026

ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க ராகுல் விரும்புகிறார்: அமித் ஷா

மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, ஊடுருவல்காரர்களின்…

அக்டோபர் 23, 2026

எல்.முருகன் ராஜினாமா: மாநிலங்களவைக்கு நவ.12-ல் இடைத்தேர்தல்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா செய்த…

அக்டோபர் 23, 2026

உத்தர பிரதேசத்தில் போலி திருமணங்கள்: மானியம் பெற நடந்த மோசடி

உத்தர பிரதேசத்தில் அரசு மானியம் பெற போலி…

அக்டோபர் 22, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய்யை கடுமையாக விமர்சித்த சிவசங்கர்: ‘ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்’

நடிகர் விஜய்யை முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 'ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்' என்று குறிப்பிட்டு, கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யின் அலட்சியமே காரணம்…

2 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ் (73) இன்று (ஜூன் 27, 2026) திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் அரசு…

1 Min Read
பெரம்பலூர்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்
தமிழ்நாடு

பெரம்பலூர்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 80 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் 80 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை குற்றவாளிகள் மீண்டும் இது போன்ற…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?