தவறாக சித்தரிக்கப்படுவதாக சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, தவெக அரசு மாநகராட்சி பணிகளை ரத்து செய்து, நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மேயர் பிரியா, 'இன்றைக்கு ஆட்சியை அமைத்திருக்கும் தவெக அரசு, மே மாதம் முதலே மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்துச் செய்துள்ளது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் நிறைய இடங்களில் கண்டனங்களைப் பதிவுச் செய்திருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 'விர்ச்சுவல் வாரியஸ்' என்று அழைக்கப்படும் சிலர் சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரிப்பதாகவும், தான் தவெக அரசையும் அதன் நிர்வாகத்தின் சீர்கேட்டையும் கண்டித்துப் பேசும் மறுநாளே, தன்னைத் தவறாகச் சித்தரித்து ஏஐ (AI) மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பி, திமுகவினரையும் தவறாகச் சித்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அவதூறு வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவுவது தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதித்துள்ளதாக மேயர் பிரியா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இன்றைக்கும் தன்னைத் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

'இதற்கான நடவடிக்கையாவது தவெக அரசு எடுக்குமா? என்று கேட்டால் அது கேள்விக் குறியான விஷயம் தான். பெண்களுக்கான பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என்று பேசினார்கள். ஆனால், ஒரு மேயராக, பெண்ணாக இருக்கக்கூடிய நான் பலமுறை இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பேசியும் மௌனம் காக்கும் முதலமைச்சர் தான், இன்றைக்கு இருக்கக் கூடிய முதலமைச்சர். இதற்கான பதில் எப்போது வரும்? என்பதை கேள்வியாகவே வைக்கிறேன்' என முதலமைச்சரைக் கண்டித்தும் அவர் பேசியுள்ளார்.

சென்னையில் மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சகோதரி, மேடையில் பேசியதற்கு அவரை அதே இடத்தில் வைத்து திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டித்தார். அதே மேடையில், மாவட்ட திமுக செயலாளரான சேகர் பாபுவும் கண்டித்தார். இதேபோல், ஏதாவது ஒரு இடத்தில் தவெக நிர்வாகிகளையோ, தவெகவில் நடைபெறும் தவறுகளையோ, முதலமைச்சரோ, அமைச்சர்களோ கண்டித்ததாக ஏதாவது ஒரு தகவல் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

'விர்ச்சுவல் அபியூசர்ஸை வைத்துக் கொண்டு இன்றைக்கு ஆட்சியமைத்திருக்கக் கூடியவர்கள், பெண்களை இழிவாகப் பேசி, பெண்களை மிகவும் தவறாகச் சித்தரிக்கக் கூடிய அரசாக தவெக அரசு இருக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கான எனது பணியைத் தொடர்ந்துச் செய்வேன்' என மேயர் பிரியா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version