MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

அரசியல்

காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

Admin
Last updated: மே 27, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், தமிழகத்தின் உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு காணொலி காட்சி மூலம் பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக உறுப்பினர், மேட்டூர் அணையில் தற்போது 40.742 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளதாகவும், குடிநீர், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவித்தார். நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-26) ஜூன் 1 முதல் மே 24 வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு 176.685 டிஎம்சி ஆகும். இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் உட்பட மொத்தம் 329.166 டிஎம்சி நீர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.

கர்நாடக உறுப்பினர், தாங்கள் வழங்கிய உபரி நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை தமிழக உறுப்பினர் சத்யபிரதா சாகு எதிர்த்தார். கர்நாடகம் தனது நீர்த்தேக்கங்களில் தேக்க முடியாமல் வெளியேற்றிய உபரி நீரை தங்களுக்கு சாதகமாக சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அதனை தமிழகத்திற்கு வழங்கிய கணக்கில் சேர்க்க இயலாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மே 26 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இப்பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், வரும் ஜூன் மாதத்திற்கு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9.91 டிஎம்சி நீரை பில்லிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery WaterTamil Naduகர்நாடகம்காவிரி நீர்தமிழகம்நீர் மேலாண்மை ஆணையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பசுவதைக்கு தடை: அவசர மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Next Article 5 மணி நேரத்தில் குழந்தை மீட்பு: தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் இணையதளம்
தமிழ்நாடு

மருத்துவ மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள்…

2 Min Read
தமிழ்நாட்டில் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ்நாடு

தொற்றா நோய்களால் தமிழ்நாட்டிற்கு சவால்கள்

துரித உணவு, புகையிலை, மதுப்பழக்கத்தால் தமிழ்நாட்டில் தொற்றா நோய்கள் அதிகரிப்பு. இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்களால் மக்கள் மற்றும் அரசுக்கு சவால்கள்.

2 Min Read
தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

12 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் அற்புத உணவுகள்!

இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். கம்பு, கேழ்வரகு, பீன்ஸ், கீரை வகைகள், பழங்கள், கொட்டைகள் போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?