MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவிற்கு முழு ஆதரவு: பிராமணர் சங்கம் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவிற்கு முழு ஆதரவு: பிராமணர் சங்கம் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெகவிற்கு முழு ஆதரவு: பிராமணர் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு

தவெகவிற்கு முழு ஆதரவு: பிராமணர் சங்கம் அறிவிப்பு

Fernandez
Last updated: அக்டோபர் 27, 2026 12:48 மணி
Fernandez
Share
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் நாராயணன்
SHARE

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற சங்கத்தின் மாநாட்டில் அதன் மாநிலத் தலைவர் நாராயணன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதுவரை எந்தவொரு சாதிய அமைப்பும் நேரடியாக தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், முதல்முறையாகப் பிராமணர் சங்கம் தனது ஆதரவை பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில மாநாடு, நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், முற்பட்டோர் நலவாரியம் அமைக்க வேண்டும், கோயில் நிர்வாகத்துக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், அர்ச்சகர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநில தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மதச்சார்பின்மை பேசும் அரசு ஹிந்து கோயில்களை மட்டும் நிர்வகிப்பது சரியல்ல. இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு தனி நிர்வாக அமைப்புகள் இருப்பதைப் போன்று, கோயில்களுக்கும் தனி வாரியம் அமைக்க வேண்டும். இதன் மூலம் கோயில் நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்ய முடியும்' எனத் தெரிவித்தார்.

மேலும், 'முதல்வர் ஜோசப் விஜய் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய வேண்டும். பெரும்பான்மை இல்லாததால் பல்வேறு அரசியல் கட்சிகள் அவரை மிரட்டி வருகின்றன' என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் த.வெ.க.,வுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்றும் பிராமணர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆதரவு தவெகவிற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Brahmin AssociationBy-electionChief Minister VijayNarayanTirunelveliTVEKஇடைத்தேர்தல்தவெகதிருநெல்வேலிநாராயணன்பிராமணர் சங்கம்முதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) லோகோ தவறான விளம்பரம்: பிரிட்டானியாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Next Article எஸ்பிஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றிய அறிவிப்பு எஸ்பிஐ சிறப்பு FD: 444 நாட்களில் ரூ.40,000 வரை லாபம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் பள்ளிக்குள் மாணவியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்

ஆந்திராவில் பள்ளிக்குள் புகுந்து மாணவியை வெட்டிய இளைஞர் கைது

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு…

நவம்பர் 1, 2026

மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தல்: ஹர்தீப் சிங் புரி வேட்புமனு தாக்கல்

மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில், மத்திய…

நவம்பர் 1, 2026

INS விக்ராந்த்: ரஃபேல் போர் விமானம் முதல் தரையிறக்கம்

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்…

அக்டோபர் 31, 2026

ஆந்திராவில் புயல் பாதிப்பு: முதல்வர் நேரில் ஆறுதல்

ஆந்திர கடலோர பகுதிகளை தாக்கிய 'அர்னாப்' புயலால்…

அக்டோபர் 31, 2026

ரேவந்த் ரெட்டி ஆட்சி முடியும் வரை பாத யாத்திரை: பாஜக எம்பி அறிவிப்பு

தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி…

அக்டோபர் 31, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை – தமிழக வெற்றிக் கழகம் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பதோ, கொண்டாட்டங்களில் ஈடுபடுவதோ கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் எச்சரித்துள்ளது.

1 Min Read
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை காட்டும் படம்
தமிழ்நாடு

கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் மூடல்: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விற்பனை குறைவு மற்றும் வர்த்தக காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின்…

2 Min Read
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிடுகிறார்
தமிழ்நாடு

பூமணி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்: ‘கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்’

கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளியான எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என…

1 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்ட ஆதவ் அர்ஜுனா: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கோரிக்கையை நிராகரித்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பதவி விற்பனை இல்லை என்றும் உழைப்பவர்களுக்கு மட்டுமே…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?