MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்

தமிழ்நாடு

பிவண்டியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி: மீட்புப் பணி தீவிரம்

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 10:54 காலை
Fernandez
Share
பிவண்டியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் மற்றும் மீட்புப் பணிகள்
பிவண்டியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் - மீட்புப் பணிகள் தீவிரம்
SHARE

தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில், கனமழை காரணமாக 4 மாடி கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால், கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, சுமார் 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த ஒரு பெண்ணை உயிருடன் மீட்டனர். அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டு, அதனை உடனடியாக காலி செய்யுமாறு பிவாண்டி மாநகராட்சி ஏற்கனவே அங்கு வசித்து வந்தவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

மாநகராட்சியின் உத்தரவை ஏற்று பெரும்பாலானோர் அந்தக் குடியிருப்புகளை காலி செய்துவிட்ட நிலையில், தரைதளத்தில் சில தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கட்டிடம் மிகவும் ஆபத்தானது என மாநகராட்சியால் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலி செய்ய உத்தரவிடப்பட்ட பிறகும், அந்தக் கட்டடத்திற்குள் பழுதுபார்க்கும் பணியை செய்ய அனுமதித்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எச்சரிக்கையையும் மீறி செயல்பட்டதன் விளைவாக இந்த துயரம் நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:6 Dead6 பேர் பலிBivandiBuilding Collapseகட்டிடம் இடிந்து விழுந்ததுதானேபிவண்டிமீட்புப் பணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லியில் உண்ணாவிரதம் நீட் தேர்வு: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் – அரசு வாக்குறுதி காக்க வலியுறுத்தல்
Next Article சென்னையில் தங்கத்தின் விலை உயர்வு குறித்த செய்தி தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் கோரிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது காயமடைந்த காவலர்களின் தரப்பு நியாயங்களையும் அரசியல் தலைவர்கள்…

ஜூலை 31, 2026

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ…

ஜூலை 31, 2026

ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் காணிக்கை எண்ணும்…

ஜூலை 31, 2026

கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் கனமழை காரணமாக எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட…

ஜூலை 31, 2026

குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திய நிலையில், சட்டமன்றத்தில் அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை…

1 Min Read
தமிழ்நாடு

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மாநில அரசுகளின் கடன் சுமை மற்றும் மூலதனச் செலவு குறித்து அவர்…

2 Min Read
தமிழ்நாடு

உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: மதிப்பெண் சர்ச்சையில் அன்புமணி கேள்வி

உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் சிலரது மதிப்பெண்களில் மட்டும் வண்ண அடையாளம் இடப்பட்டிருப்பது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்ததற்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?