MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 19 வயது வீரருடன் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா: ரசிகர்கள் ஏமாற்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 19 வயது வீரருடன் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா: ரசிகர்கள் ஏமாற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 19 வயது வீரருடன் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா: ரசிகர்கள் ஏமாற்றம்

விளையாட்டு

19 வயது வீரருடன் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா: ரசிகர்கள் ஏமாற்றம்

Admin
Last updated: மே 27, 2026 11:55 காலை
Admin
Share
SHARE

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி, தனது முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு அளித்துவிட்டு, இரண்டாம் நிலை வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த அணி தேர்வை பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிதும் விமர்சித்துள்ளனர்.

2026 ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அழைக்கவில்லை. அவர்கள் ஐபிஎல் தொடரில் ஆடுவதை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் கட்ட வீரர்களைக் கொண்ட அணி பாகிஸ்தான் செல்ல உள்ளது. 19 வயது வீரர் ஒருவருக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பை பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றத்தில் புலம்பியும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை குற்றம் சுமத்தியும் வருகின்றனர்.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் வரும் மே 30-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. ஆனால், மே 31-ம் தேதி ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஆகியோர் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றில் விளையாடுவதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரவுள்ள டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு மிட்செல் ஸ்டார்க்கிற்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட புதிய முகங்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 19 வயதான ஆலி பீக் போன்ற இளம் வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. பணிச்சுமை மேலாண்மை (Workload Management) காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketODI Seriesஆஸ்திரேலியாகிரிக்கெட்பாகிஸ்தான்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
Next Article பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் மாநில ஆளுநர்

பஞ்சாப் தனியார் பள்ளிகளில் 5% கட்டண உயர்வு: ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாப் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம் என அவசர…

ஜூலை 14, 2026

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரில் சிபிஐ…

ஜூலை 14, 2026

தேசிய விருது பெற்ற விவசாயிக்கு ரூ.83,244 சைபர் மோசடி

செல்போன் தொலைந்ததால், தேசிய விருது பெற்ற விவசாயி…

ஜூலை 14, 2026

தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக்…

ஜூலை 14, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை: 1 லட்சம் பேர் தவிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு…

ஜூலை 14, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்தியா ஏ vs இலங்கை ஏ: சூப்பர் ஓவரில் சர்ச்சை.. இந்தியா தோல்வி

தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி, கடைசி பந்து வரை நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்திற்குப் பிறகு சூப்பர் ஓவரில்…

2 Min Read
விளையாட்டு

தோனி லக்னோ செல்ல மறுப்பு: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்! காரணம் என்ன?

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ செல்ல மறுத்த தோனி.. சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம்.. தோனி விளையாடாததற்கான 3 முக்கிய காரணங்கள் என்ன?

2 Min Read
விளையாட்டு

ரிஷப் பண்ட் பாடம் கற்க வேண்டும்: இர்பான் பதான் அறிவுரை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படாத நிலையில், அவர் இஷான் கிஷனைப் போல உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டும்…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் சோகம்: ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளருக்கு புதிய மோசமான சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் 50 ரன்களுக்கு மேல் ஒன்பது முறை விட்டுக்கொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சோகமான சாதனையை ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?