தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை படிப்படியாக குறைக்க முடியும். இது தொப்பையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காய்கறிகளான காலிஃபிளவர் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து, தொப்பையை எளிதாகக் குறைக்க உதவுகின்றன.
பூண்டு, உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, கொழுப்பைக் குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. எனவே, பூண்டு உட்கொள்வதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம்.
பட்டை ஒரு சிறந்த மசாலாப் பொருளாகும். உணவில் பட்டைப் பொடியைச் சேர்ப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும், இது நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது தேவையற்ற கொழுப்புகளை சுமார் 20 சதவீதம் வரை குறைக்க உதவும். இதன் மூலம் தொப்பையை எளிதாகக் குறைக்க முடியும்.
முட்டை, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளைக் கரைக்க உதவுகிறது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடுவது தொப்பையைக் குறைப்பதில் பெரிதும் பயன்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை சர்க்கரையை மெதுவாக உறிஞ்சவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும், விட்டமின் குறைபாட்டையும் தடுக்கின்றன.

