MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

அரசியல்

மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

Admin
Last updated: மே 25, 2026 12:41 மணி
Admin
Share
SHARE

மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய கடந்த திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எனவே புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து அரசு தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மொத்த மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்ந்துள்ள நிலையில், 84 சதவீத மின்சார தேவைகளுக்கு மத்திய அரசு மற்றும் தனியார் மின்நிலையங்களையே தமிழகம் சார்ந்துள்ளது.

சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் செலவை விட பல மடங்கு அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதுவே தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டம் அடைவதற்கும், அதன் கடன் ரூ.2.50 லட்சம் கோடியை தாண்டியதற்கும் முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, 5,700 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் இருந்தன. திமுக அரசு நினைத்திருந்தால் அனைத்து திட்டப் பணிகளையும் நிறைவேற்றி உற்பத்தியை தொடங்கியிருக்க முடியும். அதிமுக ஆட்சியில் 90 சதவீத பணிகள் முடிந்திருந்த வடசென்னை 3-வது அனல் மின் நிலையத்தில் (800 மெகாவாட்) மட்டுமே கடந்த பிப்ரவரி – மார்ச் மாதத்தில் வணிகரீதியான மின் உற்பத்தி தொடங்கியது. மீதமுள்ள 4,900 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையப் பணிகள் இதுவரை முடியவில்லை.

தமிழகத்தில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். கடந்த ஆட்சியில் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் அனல் மின் திட்டங்களின் நிலை, அவை எப்போது உற்பத்தியை தொடங்கும், புதிதாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன, கார்பன் சமநிலையை அடைய அனல் மின் உற்பத்தியை எப்போது முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Power Generationஅன்புமணி ராமதாஸ்தமிழ்நாடுபாமகமின்சாரம்மின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
Next Article திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரம் குறித்து விவாதிக்க உள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை எதிரொலி: 'இந்தியா' கூட்டணி அடுத்த…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த…

செப்டம்பர் 26, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார்: 6 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து, 5 பேர் காயம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அடுத்தடுத்து…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

முன்னாள் சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு

ஒன்றிய அரசிடம் சரணாகதி – முதலமைச்சரை விமர்சித்த அப்பாவு

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைக்க இடம் கண்டறிவது, இந்தி மொழி கற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர்…

3 Min Read
அமைச்சர் ரமேஷ் திருக்கோயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

கேமரா இல்லாத போன்களுக்கு அனுமதி: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

52 முக்கிய திருக்கோயில்களில் செல்போன் தடை அமல். கேமரா இல்லாத சாதாரண போன்களுக்கு அனுமதி உண்டு என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். லாக்கர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் விஜய் உத்தரவு

தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது மின் விநியோகத்தை மேம்படுத்தும்.

1 Min Read
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

ஆட்சியை கவிழ்க்க சதி: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய மேலும் ஒருவர் கைது

முதலமைச்சர் விஜய் ஆட்சியை கவிழ்க்கும் சதி தொடர்பாக, தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய மதுரையைச் சேர்ந்த கணேசன் கைது. மேலும் 11 பேர் ஏற்கனவே கைது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?