MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசியல்

ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

Admin
Last updated: மே 28, 2026 10:05 காலை
Admin
Share
SHARE

திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், தனது வளர்ப்புத் தாயார் மற்றும் மாமாவுடன் திருவண்ணாமலைக்கு சரக்கு வாகனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களான சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரு காவலர்களும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்காமல் தாமதம் செய்வதாகக் கூறி, பாதிக்கப்பட்ட இளம் பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கும் வகையில் நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 22-க்கு தள்ளிவைத்தனர். அதேநேரம், திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிபதி தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து, ஜூலை 31-க்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Andhra PradeshTamil Naduசென்னை உயர் நீதிமன்றம்திருவண்ணாமலைபாலியல் வன்கொடுமைபோலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Next Article கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுகவில் இணைந்த வேலுமணி அணி: பழனிசாமிக்கு சபாநாயகரிடம் கடிதம்

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் இணைந்தது. இதையடுத்து, பழனிசாமியை சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்க சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
அரசியல்

மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி

மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

2 Min Read
அரசியல்

காவலர் மீது தாக்குதல்: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – வானதி சீனிவாசன்

கும்பகோணத்தில் சாலையை மறித்த பேனரை அகற்றச் சொன்ன காவலரின் கையை தவெக நிர்வாகிகள் உடைத்ததை அடுத்து, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என வானதி சீனிவாசன்…

1 Min Read
அரசியல்

ஆதவ் அர்ஜுனாவை துணை முதல்வராக்கும் முயற்சி தீவிரம்?

தமிழகத்தில் ஆதவ் அர்ஜுனாவை துணை முதலமைச்சராக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?