MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

Sri Prem Kumar R
Last updated: மே 28, 2026 6:40 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். த.வெ.க. அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல் பரவியது. ஆனால், இதனை வேலுமணி தரப்பினரும், த.வெ.க. தரப்பினரும் மறுத்து வந்தனர்.

இந்தநிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதேபோல, ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அணி மாறி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், மன்னிப்பு கடிதமும் வழங்கினர். இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.

இதையடுத்து, அ.தி.மு.க.வில் இரு பிரிவு அணிகளையும் இணைக்க எஸ்.பி.வேலுமணி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினர். கட்சியில் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் எனவும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் திரும்ப பெறவும் வலியுறுத்தினர். ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது. இருப்பினும், மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், லீமாரோஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கடிதத்தை வழங்கி இணைந்தனர். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செல்லவில்லை. சி.விஜயபாஸ்கர் தலை மைச்செயலகத்திற்கு நேரடியாக சென்றிருந்தார். சி.வி.சண்முகம் சென்னை பால வாக்கம் வீட்டில் இருந்தார். பின்னர், பேச்சுவார்த்தை முடிந்தபின் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, 'தற்போது நான் எதுவும் பேச விரும்பவில்லை' எனக்கூறி எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி அவர் கோபத்துடன் புறப்பட்டு சென்றார். அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய விருப்பம் இல்லாமல் மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், புதுக்கோட்டை இலுப்பூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தபின் முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 'எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்' என்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
Next Article சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

போக்சோ, கொலை முயற்சி வழக்குகள்: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3 பேர், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.…

2 Min Read
தமிழ்நாடு

ஆளுங்கட்சிக்கு தன்னடக்கம் தேவை: கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக கூட்டணியின் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ஆளுங்கட்சிக்கு தன்னடக்கம் தேவை என்றும், திமுகவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

அ.ம.மு.க.விலிருந்து எஸ். காமராஜ் நீக்கம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக டி.டி.வி.…

2 Min Read
தமிழ்நாடு

திமுகவில் அதிரடி மாற்றம்: ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி அமைப்பு முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும், கோஷ்டி அரசியலை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?