MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் சர்ச்சை: ஆர்.பி.உதயகுமாருக்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சரமாரி கேள்வி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > அதிமுகவில் சர்ச்சை: ஆர்.பி.உதயகுமாருக்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சரமாரி கேள்வி!
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் சர்ச்சை: ஆர்.பி.உதயகுமாருக்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சரமாரி கேள்வி!

Admin
Last updated: June 18, 2026 6:54 am
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்த தவெக-விற்கு சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த விஜயபாஸ்கர், தான் கட்சியில் இருந்து விலகுவதாகவும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாகவும் அறிவித்திருந்தார். மேலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், 'அடையாளம் கொடுத்து, அதிகாரம் கொடுத்து, முகவரி கொடுத்து, வாழ்வு கொடுத்து, தங்களை ஆளாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டிய இந்த சோதனையான நேரத்திலே கட்சி சரியில்லை, தொண்டர்கள் சரியில்லை, தலைமை சரியில்லைன்னு அவதூறுகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருந்தால் தொண்டர்கள் இனியும் எப்படி பொறுத்துக் கொள்வார்கள். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடை கொடுத்து இருக்கிறார். இது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு வேதனையை தான் தலைமைக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கட்சிக்கு விஜயபாஸ்கர் வருவதற்கு முன்பாக தனக்கும், தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துபத்துகளையும் இப்போது விஜயபாஸ்கர் வைத்திருக்கிற சொத்து பத்துக்கள் முதலீடுகளை எல்லாம் அவர் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்கு போவாரா? இது தொண்டர்களுடைய எதிர்பார்ப்பு. கட்சியில வாங்கின பதவி வேணடாம், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேண்டாம் என ராஜினாமா செய்து விட்டு என்று போய்விட்டீர்கள். அதனால் நியாயப்படி நீங்கள் கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்த நிலையில் தானே வேற கட்சிக்கு போக வேண்டும். இந்த கட்சியில் எல்லாம் ஆண்டு அனுபவிப்பீங்க சொத்து பத்துகளை சேர்த்து முதலீடு செய்தீர்கள், செல்வாக்கை சேர்ப்பீர்கள், எல்லாம் சேர்த்த பிறகு தலைமையும் விமர்சிப்பீர்கள். தொண்டர்களை கைவிட்டு, மக்களை கைவிட்டு, உங்கள் சுயநலத்திற்காக உங்கள் முதலீடைக் காப்பாற்ற, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியை காட்டிக் கொடுத்தால் தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் வயிறு எரிகிறது. எம்ஜிஆர் வளர்த்த கட்சி, அம்மா வளர்த்த கட்சி, இன்றைக்கு சாமானியர் எடப்பாடியார் கட்சியை நடத்தி வருகிறார் தலைமை சரி இல்லை என்று பதிவு போடுகிறீர்கள் எப்போ போடுவது? சொந்த கட்சியில் ஜெயித்தால்தான் அமைச்சராக முடியும் வேறு கட்சியில் அமைச்சரானால் மதிக்க மாட்டார்கள். த.வெ.க நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பாக சேர்ந்து இருக்க வேண்டாமா? ஏன் தேர்தல் பின்பு த.வெ.கவில் சேருகிறீர்கள் விஜயை வாழ வைக்கப் போகிறீர்களா? எத்தனை பதவி சுகம் கொடுத்த கட்சியை தோற்றவுடன் காட்டிவிட்டு செல்கிறீர்கள் அதிமுகவிற்கு இந்த கதி தான் விஜய்க்கு என்ன கதி? தலைமை சரியில்ல என கருத்து சொல்லி நாடகமாடி கட்சி தொண்டர்களுடைய நலனையும், கட்சியின் எதிர்காலத்தையும் காவு கொடுத்து விட்டு தங்களுடைய வாழ்வாதாரம் மட்டுமே முக்கியம் என்று கட்சி தாவுகிற நடவடிக்கை இனிமேல் தொடர்ந்தால் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எச்சரிக்கைக்காக இதை சொல்லுகிறேன்' எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜயபாஸ்கரை விமர்சித்த ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். 'எங்களுடைய அழுத்தத்தின் காரணமாக தான் அவர் (விஜயபாஸ்கர்) MLA பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு உதயகுமார் அவர்கள் பேசி இருப்பது மிகவும் தவறு. அவர் சொத்து கணக்கை காட்ட சொல்லுறாரு. 2016 முன்னாடி பொதுச்செயலாளர் சொத்து கணக்கு இருக்கும்-ல அந்த சொத்து கணக்கை பொதுச்செயலாளர் காமிக்கட்டும் அதுக்கு அப்புறம் எல்லோரும் காட்டட்டும்.நாங்களும் சொத்து கணக்கை காட்ட சொல்றோம். எங்களுக்கு அதுல பிரச்சனை எதுவும் இல்லை. உதயகுமார் அவைகளையும் சொத்து கணக்கை காட்ட சொல்லுங்க முதல்ல அவரை மதுரை மாவட்டத்துல ஒரு தொகுதியில் ஜெயிக்க சொல்லுங்க..அப்புறம் பார்க்கலாம்' என பேசினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. ஆர்.பி.உதயகுமார் மற்றும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுக்கு இடையேயான இந்த வார்த்தை போர், கட்சித் தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஆர்.பி. உதயகுமார்தமிழக அரசியல்விஜயபாஸ்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அசிடிட்டி: சாப்பிடும் முறைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவை
Next Article திமுக பிரமுகர் அட்டூழியம்: தவெகவிற்கு வாக்களித்ததால் தண்ணீர் குழாய் அறுப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரப்பிரதேசத்தில் சோகம்: பைக் மோதி கணவன் மனைவி உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தின் ராஸ்ரா-மௌ சாலையில், நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது அதிவேக பைக்…

June 18, 2026

டிஜிட்டல் யுகத்திலும் பேப்பர் செலவில் இந்திய வங்கிகள்: எஸ்பிஐ முதலிடம்

இந்திய வங்கிகள், குறிப்பாக எஸ்பிஐ, டிஜிட்டல் யுகத்திலும்…

June 18, 2026

மதுபோதையில் இளம்பெண் கொலை: லாரி டிரைவர் கைது

13-ந்தேதி இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில்…

June 18, 2026

தேச பாதுகாப்பில் இந்தியா முன்மாதிரி: அமித்ஷா

தேச பாதுகாப்பில் இந்தியா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது…

June 18, 2026

மேகதாது திட்டம் தமிழ்நாட்டுக்கு நன்மை: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

மேகதாது அணைக்கட்டு திட்டம் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை…

June 18, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி பாடம்: திலக் வர்மா விளக்கம்

இளம் வீரர் திலக் வர்மா, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி குறித்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இருவரும் பேட்டிங்கை விட கேப்டன்சி பற்றி அதிகம் பேசுவதாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரான் ரகசிய எண்ணெய் பறிமுதல்: டிரம்ப் அதிர்ச்சி தகவல்

ஈரானின் ரகசிய எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல். நாகப்பட்டினம்: ​நாகை- இலங்கை இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இன்​ஜின் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஓட்டுநர் உரிமம்: 50 வயதுக்கு பின் புதுப்பித்தல்? மத்திய அரசின் புதிய திட்டம்!

ஓட்டுநர் உரிமத்தை 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் புதிய நடைமுறையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?