MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக கண்டனம்: ‘கொத்து புரோட்டா’ சர்ச்சை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக கண்டனம்: ‘கொத்து புரோட்டா’ சர்ச்சை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக கண்டனம்: ‘கொத்து புரோட்டா’ சர்ச்சை

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக கண்டனம்: ‘கொத்து புரோட்டா’ சர்ச்சை

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 8:03 காலை
Fernandez
Share
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் பேசுகிறார்
சிவகாசியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
SHARE

சிவகாசி: அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் விரைவில் தாய் கழகத்தில் இணைவார்கள் என்றும், முதலமைச்சர் விஜய்யின் 'கொத்து புரோட்டா' பேச்சு நியாயமற்றது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், 'அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் அனைவரும் விரைவில் மண்ணைக் கவ்வப் போகிறார்கள். சிலர் எடப்பாடி பழனிச்சாமியின் துரோகம் செய்துவிட்டு, அதிமுகவை வைத்து பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டு வெளியேறியுள்ளனர். ஆனால், அவர்கள் தாய் கழகத்தில் மீண்டும் இணையும் காலம் விரைவில் வரும். அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள். சிலர் தவெகவில் இணைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் பொய்' என்று தெரிவித்தார்.

மேலும், 'தவெகவின் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது. அவர்களின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தவெகவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்திருந்தால், 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணியின் வெற்றியை வைத்து ஆட்சி அமைத்துள்ளார்கள்' என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் பேச்சு குறித்து பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, 'மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினை 'கொத்து புரோட்டா' போடுவோம் என முதலமைச்சர் விஜய் பேசுவது எந்த வகையில் நியாயம்? ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி நிலைக்காது. விரைவில் அவருக்கு கோபம் வரும். நானும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். ஆனால், அவரை ஒருபோதும் அவமானமாகப் பேசியதில்லை' என்று குறிப்பிட்டார்.

திமுகவை 'மத யானைக்கு நிகரானது' என்று குறிப்பிட்ட ராஜேந்திரபாலாஜி, 'எங்களை பார்த்து தூர்ந்து போன சக்தி என கூறுவது சரியல்ல. தவெக-வுக்கு வாக்களித்த மக்களே இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால், தவெக ஆட்சி மூன்றாண்டுகள் மட்டுமே நீடிக்கும்' என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர் தார்மீகத்துடன் பேச வேண்டும் என்றும், இதற்கு முன்னர் எந்த முதலமைச்சரும் விஜய் போல் யாரையும் வசைபாடியதில்லை என்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். 'தவறு செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும். ஒரு முதலமைச்சரே இப்படி பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை காட்டுகிறது. தவெக தலைவர் விஜய்யின் பேச்சை யாரும் ரசிக்கவில்லை' என்று அவர் தனது பேச்சை நிறைவு செய்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅரசியல்கே.டி.ராஜேந்திரபாலாஜிகொத்து புரோட்டாதவெகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்பில் மகேஷுக்கு பகிரங்க மன்னிப்பு கோர நந்தகுமாருக்கு நோட்டீஸ்
Next Article அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி அருணாச்சல பிரதேசத்தில் கனமழை: 1 லட்சம் பேர் தவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமர்நாத் குகைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம்

அமர்நாத் யாத்திரை: 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீரில் உள்ள புனித அமர்நாத் குகைக்கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களின் எண்ணிக்கை…

ஜூலை 15, 2026

ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு: யோகி ஆதித்யநாத் விமர்சனம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர்…

ஜூலை 15, 2026

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர…

ஜூலை 15, 2026

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய எம்.டி.எஸ் படிப்புகள்

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இந்த…

ஜூலை 15, 2026

கேரளாவில் சிறையில் பாஜக கவுன்சிலர் பதவிப்பிரமாணம்!

கேரளாவில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு…

ஜூலை 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் நாளை மின்சாரம் துண்டிப்பு: முக்கிய பகுதிகள் அறிவிப்பு!

சென்னையில் நாளை மே 24, 2026 அன்று, அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் முகப்பேர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக மேயர் சீட் வென்றால் மீசையை எடுப்பேன்: ஆர்.எஸ்.பாரதி சவால்

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தமாக வெற்றி பெற்றால், தனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமாகவுக்கு சவால்…

1 Min Read
லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமர்செல்வம் கைது
தமிழ்நாடு

செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

செங்கோட்டையில் நில சர்வேயர் ஒருவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

தகுதியில்லைனா நீக்கம்: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!

அரசு வழக்கறிஞர் நியமனங்களில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், 6 மாதங்களுக்குள் தகுதி இல்லையெனில் நீக்கம் என அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?