MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக எதிரி அல்ல, பங்காளியே – ஆர்.எஸ்.பாரதி பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக எதிரி அல்ல, பங்காளியே – ஆர்.எஸ்.பாரதி பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக எதிரி அல்ல, பங்காளியே – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அரசியல்

அதிமுக எதிரி அல்ல, பங்காளியே – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

அதிமுக எங்கள் எதிரி அல்ல, பங்காளியே. அவர்களுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு? என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காணவும், எங்கள் கண்களை திறக்கவும் இது உதவியுள்ளது. விரைவில் மாற்றம் வரும், அப்போது நாங்கள் யார் என்பதை காட்டுவோம். ஒரு கட்சியின் தொண்டர்களின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, 10 நாட்களில் வேறு கூட்டணிக்கு செல்வது கேவலமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்கின்றனர். திமுக கூட்டணியிலிருந்து விலகி செல்பவர்களும் இதே முறையை பின்பற்றினால் நல்லது.

இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் வெல்வார் என நினைக்கவில்லை. இப்படி ஓர் அதிசயம் நடந்ததால், பலம் மிக்கவர்கள் பலியாகி விட்டனர். அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து திமுக பேசவில்லை. அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. பலமுறை கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டு வைத்திருந்தன. த.வெ.க. உடன் சென்றதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக அப்படி சொல்கின்றனர். இப்படி கூட்டணி மாறும் கட்சிகளை 60 ஆண்டுகளாக நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்.

திமுகவிலிருந்து அதிமுக பிரிந்து 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கட்சி எங்களுக்கு பகையாளி அல்ல; பங்காளி தான். அதற்காக நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அப்படியே அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அதில் ஒன்றும் தவறு இல்லை. திமுக, அதிமுகவை சட்டசபையில் ஒரே வரிசையில் காலம் அமர வைத்துவிட்டது. காலம் கனிந்து விட்டது. இதையெல்லாம் பார்க்கும் தொண்டர்கள், இருவரும் இணைந்து விட்டதாக நினைக்கின்றனர். இந்த இணைப்புக்கு எங்களுடன் இருந்த கூட்டணி கட்சிகளே காரணம். ஸ்டாலினால் தான் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு அதிமுக தொண்டர்கள் வந்துவிட்டனர்.

தற்போது கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே வெளியேறியிருந்தால், கூடுதல் தொகுதிகள் திமுகவுக்கு கிடைத்திருக்கும். திமுக கூட்டணியை உடைப்பதில் த.வெ.க. மட்டுமல்ல, வேறு பெரும் சக்தியும் வேலை செய்து வருகிறது. கூட்டணியிலிருந்து போகிறவர்கள் போகட்டும். இதை எதிர்கொள்வதற்கான வியூகங்களை திமுக தலைவர் ஸ்டாலின் வகுத்து வருகிறார். திமுகவிலிருந்து எந்த தலைவரும், தொண்டரும் செல்லவில்லை. கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஆர்.எஸ்.பாரதிகூட்டணிதமிழக அரசியல்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கொல்கத்தாவில் சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!
Next Article பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் 35,000 பேர் யோகா பயிற்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அமைச்சர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை – வீரபாண்டியன்

ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், கம்யூனிஸ்டு கட்சிகளின் வரலாற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புரட்டிப் பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

1 Min Read
அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பேச்சு
தமிழ்நாடு

எங்களை ஏமாற்றினீர்களா? ஏன் ஓட்டுப் போடவில்லை? – அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி

திருச்செந்தூரில் நலக்கூடம் திறப்பு விழாவில் பேசிய எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், வாக்காளர்கள் தனக்கும், கனிமொழிக்கும் ஏன் வாக்களிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். முதல்வர் விஜய் குறித்தும் விமர்சித்தார்.

2 Min Read
சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
தமிழ்நாடு

தவெக வேட்பாளர்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வேட்பாளர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?