மதுராந்தகம் தொகுதியை ஒரு வளர்ச்சி அடைந்த தொகுதியாக மாற்ற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகத்தில் தனது பரப்புரையின் போது பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே உள்ள புரிதலை கடுமையாக சாடினார். "இரண்டாம் இடத்தை யார் பிடிப்பது என்பதில் தான் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் போட்டி. அதிலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக ஒரு பெட்டியை (பணத்தை) வாங்கிக் கொண்டுவிட்டது. அதேபோல், தாராபுரத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுகவும் ஒரு பெட்டியை வாங்கிக் கொண்டுவிட்டது," என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பெட்டிகளை வாங்கிக் கொண்டு செயல்படும் திமுக, இன்று அந்த பெட்டிகளுடன் சுற்றி வருவதாக அவர் விமர்சித்தார். எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தபோது, ஜெயலலிதா சிங்கம் போல செயல்பட்டதாகவும், அப்போது திமுகவினர் அவரை கண்டு அஞ்சி நடுங்கியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். ஜெயலலிதாவிற்கு பிறகு, திமுகவினர் விஜயை கண்டு தான் அஞ்சி நடுங்கினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில், திமுக மற்றும் அதிமுக இடையே இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் தான் போட்டி நிலவுவதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ராஜ்மோகன் அடித்து துவைத்து விட்டதாகவும், உள்ளூர் தொகுதியிலேயே அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். மதுராந்தகம் திமுக வேட்பாளரை எழும்பூரில் ராஜ்மோகன் தோற்கடித்ததை அவர் சுட்டிக்காட்டினார். "அண்ணன் ரெண்டு ரவுண்டு தான் வந்தாரு, மொத்தமா காலி ஆயிட்டாரு," என்று அவர் குறிப்பிட்டார்.
