MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அபிஷேக்கிற்கு மட்டும் ஏன் இத்தனை வாய்ப்புகள்? சாம்சனுக்கு ஏன் இல்லை? – ஸ்ரீகாந்த் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அபிஷேக்கிற்கு மட்டும் ஏன் இத்தனை வாய்ப்புகள்? சாம்சனுக்கு ஏன் இல்லை? – ஸ்ரீகாந்த் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - அபிஷேக்கிற்கு மட்டும் ஏன் இத்தனை வாய்ப்புகள்? சாம்சனுக்கு ஏன் இல்லை? – ஸ்ரீகாந்த் கேள்வி

விளையாட்டு

அபிஷேக்கிற்கு மட்டும் ஏன் இத்தனை வாய்ப்புகள்? சாம்சனுக்கு ஏன் இல்லை? – ஸ்ரீகாந்த் கேள்வி

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 26, 2026 1:25 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த்
SHARE

ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி முடிந்த நிலையில், இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தொடரில் இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன் சிறந்த ஃபார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் இருந்தாலும், அபிஷேக் சர்மாவின் பேட்டிங் தடுமாற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எதிரணி பந்துவீச்சாளர்கள் அவரது பலவீனத்தை கண்டறிந்துவிட்டதால், அபிஷேக் ரன் குவிக்க மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், கிரீஸில் அதிக நேரம் செலவிட பழக வேண்டும் என்றும் கிரிஸ் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், 'அபிஷேக் சர்மாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது. திடீரென அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்று நம்புகிறேன். ரன் குவிப்பதற்கு அவர் மாற்று வழியைக் கண்டறிய வேண்டும். அல்லது ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக விளையாட வேண்டும். அவர் நினைத்தால் அதிரடியாக விளையாடக்கூடிய திறமை கொண்டவர்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'விக்கெட் எளிதில் பறிகொடுப்பதற்கு பதிலாக, முதலில் 100 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிவிட்டு, பின்னர் அதை 200 ஆக உயர்த்திக் கொள்ளலாம்' என அபிஷேக்கிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். அபிஷேக் சர்மா கடந்த இரு போட்டிகளில் முறையே 1 மற்றும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவசரப்பட்டு தேவையில்லாத ஷாட்களை ஆடி, ரன் எதுவும் சேர்க்க முடியாமல் இரண்டு முறையும் அவர் ஆட்டமிழந்துள்ளார்.

உலகக் கோப்பை முதலே, ஒரு சில இன்னிங்ஸ்களைத் தவிர அவரது சர்வதேச ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. சாம்சன் உலகக் கோப்பையின் MVP வீரராக இருந்தார். அவருக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை, ஆனால் அபிஷேக்கிற்கு மட்டும் எப்படி தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன? இது மிகவும் நியாயமான கேள்வி. அபிஷேக்கிற்கு இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்படும் போது, சாம்சனுக்கு ஏன் இல்லை? ஒரு வீரருக்கு சாதகமாகவும், மற்றொரு வீரருக்கு பாதகமாகவும் ஏன் இந்த அணுகுமுறை நடக்கிறது?' என்று ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அபிஷேக் சர்மா உலகக் கோப்பையில் விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார், அவரது சராசரி 17.62 ஆகும். அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடிய 5 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தார், சராசரி 26.20 ஆகும். ஸ்ரீகாந்த் குறிப்பிட்டது போல, அபிஷேக் சர்மா ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகிறார்.

இந்தியா-ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவனில் இன்று 4 மாற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதில் 2 பேர் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், வீரர்களின் தேர்வு மற்றும் வாய்ப்புகள் குறித்த ஸ்ரீகாந்தின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அபிஷேக் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் மற்றும் சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் எழுப்பியுள்ள கேள்விகள் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Abhishek SharmaCricketIndiaKris SrikkanthSamsonZimbabweஅபிஷேக் சர்மாஇந்தியாகிரிக்கெட்கிரிஸ் ஸ்ரீகாந்த்சாம்சன்ஜிம்பாப்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சேலம்: கோட்டை மாரியம்மன் திருவிழாவால் ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை
Next Article எண்ணூர் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் மற்றும் மாணவி எண்ணூர் கடற்கரையில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர், மாணவி உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

2028 தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 2028 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என…

ஜூலை 26, 2026

பதவி விலக தர்மேந்திர பிரதான் தயார்: கைலாஷ் விஜயவர்கியா தகவல்

மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மத்திய…

ஜூலை 26, 2026

கருங்கடலில் இந்திய கப்பல் பணியாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

கருங்கடல் பகுதியில் கப்பல் பணியில் ஈடுபடும் இந்தியர்கள்…

ஜூலை 26, 2026

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார்.…

ஜூலை 26, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா…

ஜூலை 26, 2026

You Might Also Like

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது பெற்றோர் உடன்
விளையாட்டு

கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு: பெற்றோருக்கு அழைப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ள ரோஹித் சர்மா, தனது கடைசி ஆட்டத்தை காண பெற்றோரையும் லண்டனுக்கு அழைத்துள்ளார். இது…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல்
விளையாட்டு

திலக் வர்மாவை நீக்கி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு: பார்த்திவ் படேல் வலியுறுத்தல்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில், துணை கேப்டன் திலக் வர்மாவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பார்த்திவ்…

2 Min Read

உலக நன்மைக்காக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு: மோடி, ரூபியோ சந்திப்பு

உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் டெல்லியில் இன்று நடைபெற்ற…

2 Min Read
ஸ்டீபன் பிளெமிங் சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்
விளையாட்டு

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ராஜினாமா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், 18 ஆண்டுகாலப் பிணைப்புக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?