MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

தமிழ்நாடு

ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

Admin
Last updated: மே 17, 2026 3:29 மணி
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, அவரது மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மைத்துனர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த முருகன் (45), ஐஸ் வியாபாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி பொன்மொழிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறின் போது, முருகனின் மனைவி பொன்மொழியின் தாய் காசி அம்மாள் (70) தலையிட்டு, மகளை சமாதானம் செய்து, முருகனை கண்டித்துள்ளார். மேலும், முருகனின் குடிப்பழக்கத்தையும் கண்டித்துள்ளார். இதனால் மாமியார்-மருமகன் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த முருகன், மாமியார் காசி அம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். இதில் காசி அம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த காசி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

நடந்த சம்பவத்தை தனது மகன்களான பழனிசாமி (51) மற்றும் பாண்டியன் (41) ஆகியோரிடம் காசி அம்மாள் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், முருகன் வீட்டுக்கு சென்று, 'ஏன் எங்கள் தாயை தாக்கினாய்?' என்று கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த முருகன், மைத்துனர்கள் இருவரையும் தாக்க முயன்றுள்ளார். அப்போது, பாண்டியன் அங்கிருந்த கட்டையை எடுத்து முருகனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பயந்துபோன பழனிசாமி மற்றும் பாண்டியன், முருகன் விபத்தில் சிக்கியதாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையில், மைத்துனர்களே முருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாங்கள் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeMurderTamil Nadu Newsகொலைதிருப்பூர் செய்திகள்பல்லடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதுச்சேரி: காங்கிரஸ் – தவெக கூட்டணி? நாராயணசாமி பகீர்!
Next Article பிரபுதேவா, வடிவேலுவின் ‘பேங் பேங்’: ஜோம்பி ஜானரில் அதிரடி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்‌ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
தமிழ்நாடு

கேஜிஎஃப் யாஷ் நடிக்கும் ‘டாக்‌ஸிக்’ டிரெய்லர் வெளியீடு!

கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்‌ஸிக்' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 Min Read
நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்
தமிழ்நாடு

விக்ரம் – ஆனந்த் ஷங்கர் இணையும் ‘பவர் ஹவுஸ்’ டைட்டில் அறிவிப்பு!

விக்ரம் நடிக்கும் 63வது படத்திற்கு 'பவர் ஹவுஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் ரியா ஷிபு நாயகியாக அறிமுகமாகிறார்.

1 Min Read
தமிழக முதல்வர் விஜய் ஓட்டுநர் உரிமம் ஆன்லைன் அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

ஓட்டுநர் உரிமம் இனி ஆன்லைனில்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ்களை இனி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். வரும் 15ஆம் தேதி முதல் டிஜிட்டல் உரிமம் ஒரே…

2 Min Read
பாடகி எஸ். ஜானகி
தமிழ்நாடு

எஸ். ஜானகியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்!

எஸ். ஜானகியின் குரலில் ஒலித்த மறக்க முடியாத டாப் 10 பாடல்கள் மற்றும் அவரது மற்ற சிறந்த பாடல்கள் பற்றிய தொகுப்பு.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?