MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐபிஎல் 2026: கேட்ச் விட்டதால் தோல்வி.. சுப்மன் கில் கடும் சீற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐபிஎல் 2026: கேட்ச் விட்டதால் தோல்வி.. சுப்மன் கில் கடும் சீற்றம்!
விளையாட்டு

ஐபிஎல் 2026: கேட்ச் விட்டதால் தோல்வி.. சுப்மன் கில் கடும் சீற்றம்!

Admin
Last updated: May 17, 2026 8:28 am
Admin
Share
SHARE

சென்னை: ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஐந்து தொடர் வெற்றிகளுடன் அசத்தி வந்த குஜராத் அணியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியில் குஜராத் அணி பெற்ற தோல்விக்கு, ரன்கள் விட்டுக் கொடுத்ததை விட வீரர்கள் செய்த மன்னிக்க முடியாத பிழைகளே முக்கிய காரணம் என கேப்டன் சுப்மன் கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த குஜராத் அணிக்கு, பீல்டிங் ஒரு பெரும் சவாலாக அமைந்தது. கொல்கத்தா வீரர்களின் நான்கு மிக எளிமையான கேட்ச் வாய்ப்புகளை அடுத்தடுத்து கோட்டை விட்டனர். குறிப்பாக, அதிரடியாக விளையாடிய ஃபில் ஆலன் 14 மற்றும் 33 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட ஃபில் ஆலன், வெறும் 35 பந்துகளில் 93 ரன்களை விளாசி அசத்தினார்.

மேலும், கேமரூன் கிரீன் 23 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பும் நழுவவிடப்பட்டது. இவர் 52 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இளம் வீரர் ரகுவன்ஷிக்கு கொடுத்த கேட்ச் வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது. இப்படி வரிசையாகக் கிடைத்த நான்கு முக்கிய கேட்ச் வாய்ப்புகளை குஜராத் வீரர்கள் நழுவவிட்டதால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது.

248 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, போராடி 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் சுப்மன் கில், தனது அணியினரின் ஆட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். 'இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் என்பதே சவாலான இலக்கு. ஆனால் நாங்கள் மிக எளிமையான 3 அல்லது 4 கேட்சுகளைத் தவறவிட்டோம். நாங்கள் ஒரு குறிப்பிட்ட தரத்தில் விளையாடுகிறோம், ஆனால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக கேட்சுகளை விட்டால் நாங்கள் வெற்றிபெறத் தகுதியானவர்களே இல்லை' என்று அவர் கூறினார். 'நிச்சயமாக இது ஒரு ஏமாற்றமான ஆட்டம் தான். இருப்பினும், தகுதிச் சுற்றுகளில் இது போன்ற தவறுகள் நடப்பதை விட, லீக் சுற்றிலேயே இது நடந்தது ஒரு வகையில் நல்லது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:IPL 2026ஐபிஎல் 2026கிரிக்கெட்குஜராத் டைட்டன்ஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சுப்மன் கில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஒரே நாடு ஒரே தேர்தல்: கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – நாடு தழுவிய பாதையாத்திரை!
Next Article 55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ விபத்து! 68 பயணிகள் பத்திரமாக…

May 17, 2026

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள்…

May 17, 2026

சத்தீஸ்கரில் பெட்ரோல் தட்டுப்பாடு: ரூ.300 கட்டுப்பாடு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்திகள் காரணமாக,…

May 17, 2026

தலைமை நீதிபதி விளக்கம்: இளைஞர்களை கரப்பான் பூச்சி என்றதில்லை!

போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி நுழைந்தவர்களை 'ஒட்டுண்ணிகள்' என்றேன்;…

May 17, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பேராசிரியர்கள் சிக்கினர்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், வேதியியல்…

May 17, 2026

You Might Also Like

விளையாட்டு

தாய்லாந்து ஓபன்: இந்திய இரட்டையர் ஜோடி அரையிறுதியில்!

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய இரட்டையர் ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, ஜப்பானிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

1 Min Read
விளையாட்டு

சிஎஸ்கே பிளே ஆஃப் நிச்சயம்: கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை!

ஐபிஎல் 2026: அடுத்த இரு போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறுவோம் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
விளையாட்டு

IPL 2026: புவனேஸ்வர் குமார் செய்த செயல்.. மிரண்ட மும்பை இந்தியன்ஸ்.. 3 ஓவரில் 3 விக்கெட் காலி

ராய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமான பேட்டிங் வரிசையை புவனேஸ்வர் குமார் தனது ஸ்விங் பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தார். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: துவம்சம் செய்த ஸ்ரேயாஸ், பிரியான்ஷ்.. மிரண்டு போன டெல்லி கேப்பிடல்ஸ்.. 210 ரன் குவிப்பு

தரம்சாலா: டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. குறிப்பாக உலகின் முன்னணி பந்துவீச்சாளரான மிட்செல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?